Kathir News
Begin typing your search above and press return to search.

பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழில்: அசத்தும் இந்திய சிறுவன் !

ராஜஸ்தானில் வசிக்கும் இந்திய சிறுவன் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழிலில் ஈடுபடுகிறார்.

பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் தொழில்: அசத்தும் இந்திய சிறுவன் !
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 Sep 2021 1:26 PM GMT

ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் ஆதித்யா என்பவர். இந்த சிறுவன் தற்போது டிராஷ் டு ட்ரெஷர் என்ற நிறுவனத்தி நிறுவி, அதில் பிளாஸ்டிக் கழிவுகளை துணியாக மாற்றி வரும் தொழிலில் தற்பொழுது நடத்தி வருகிறாராம். இந்தச் செய்தி தான் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் கேள்விப்படுவோரை வியப்பில் ஆழ்த்துகிறது. உண்மையில் இவருடைய இந்த வெற்றிக்குக் காரணம் இவருடைய குடும்பத்தினர். இவருடைய குடும்பம் முழுவதும் Kanchan India Limited என்ற ஜவுளி உற்பத்தி வணிகத்தை நடத்தும் குடும்பத்தை சேர்ந்தவர்கள். குறிப்பாக இவர் பத்தாவது படிக்கும் போது தனது உறவினருடன் சீனாவிற்கு சுற்றுலா சென்றுள்ளான்.


இந்த பயணம் தான் தொழில் ரீதியாக ஒரு புதிய மாற்றத்தை கொடுத்தது என்று குறிப்பிட்ட சிறுவன் இதுபற்றி கூறுகையில், "சீனாவின் ஓரிடத்தில் பெரிய அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை துணியாகவும், நாம் அணிந்து கொள்ள கூடிய பொருட்களாக மாற்றுவதையும் பார்த்தேன். இத்தகைய தொழில்கள் குறிப்பாக நிலங்களில் கிடைக்கும் கழிவுகளை குறைப்பதோடு, சிறந்த தரமான பொருட்களை உற்பத்தி செய்ய முடியும் என்பதை எனக்கு உணர்த்தியது. இதை தவிர இந்த பிசினஸ் உள்ளூரில் உள்ளவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்குகிறது" என்று குறிப்பிட்டு உள்ளார்.


பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் வ்ரேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களை மறுசுழற்சி செய்து துணியாக மாற்றும் அற்புத பணியில் ஈடுபட்டு வருகிறது சிறுவனின் டிராஷ் டு ட்ரெஷர் நிறுவனம். பிளாஸ்டிக் கழிவுகளை துணியாக மாற்றுவதற்கான தேவைப்படும் நாட்கள் இரண்டு ஆகும். ஆனால் பிளாஸ்டிக் கழிவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் துணி வழக்கமான காட்டன் துணியை விட வலிமையானது மற்றும் அதிக நாட்கள் உழைக்க கூடியதாக இருக்கும் என்று சிறுவன் ஆதித்யா பாங்கர் கூறி இருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் துவக்கப்பட்ட டிராஷ் டு ட்ரெஷர் நிறுவனத்தில் ஒவ்வொரு நாளும் துணி தயாரிக்க 10 டன் பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறதாம்.

Input & Image courtesy:News18


Next Story
கதிர் தொகுப்பு
Trending News