Kathir News
Begin typing your search above and press return to search.

சாதாரண மனிதர்களைப் போல சாலையில் நடமாடும் டெலிவரி ரோபோக்கள் !

டெலிவரி வேலை செய்யும் மனிதர்களைப் போலவே, வெளி நாடுகளில் டெலிவரி செய்யும் ரோபோக்களும் பிரபலமடைந்து வருகின்றன.

சாதாரண மனிதர்களைப் போல சாலையில் நடமாடும் டெலிவரி ரோபோக்கள் !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  6 Nov 2021 1:08 PM GMT

இந்த நவீன காலத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளில் ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும், நம் அன்றாட வாழ்க்கையில் ரோபோக்கள் பெரிதாக இடம் பெறவில்லை. ஒரு சில உணவகங்களில் ரோபோக்களை நம்மால் காண முடிகிறது. ஆனால் தற்போதைய கொரோனா பெருந்தொற்று காலத்தில் சமூக விலகலை பராமரிக்கவும், மக்களின் நேரடி தொடர்புகளை தடுக்கவும் ரோபோக்களின் பயன்பாடு ஆங்காங்கே செயல்பட ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் தற்போது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் உள்ள பல இடங்களில் உணவு டெலிவரி செய்ய ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முழங்கால் உயரமே கொண்ட நூற்றுக்கணக்கான சிறிய ரோபோக்கள், அமெரிக்கா போன்ற பல நாடுகளில் உள்ள கல்லூரி வளாகங்கள், சில நகரங்கள் உள்ளிட்ட பிற இடங்களில் நாம் வலம் வருகின்றன.


இந்த சிறிய ரோபோக்கள் நான்கு பெரிய பீஸ்ஸாக்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்டவை. தற்போது சில நகரங்களின் நடைபாதைகளில் கூட இவற்றை காண முடியும். இது தொடர்பாக சமீபத்தில் தனது 2 மில்லியன் ரோபோ விநியோகத்தை முடித்த ஸ்டார்ஷிப் டெக்னாலஜிஸின் CEO அலஸ்டர் வெஸ்ட்கார்த் கூறுகையில், "ரோபோ பயன்பாட்டிற்கான தேவை அதிகரித்து வருவதை நாங்கள் கண்டோம். அதன் தேவை எப்போதும் இருப்பதாக நான் நினைக்கிறேன். ஆனால் அது தற்போதைய தொற்றுநோயால் முன்னோக்கி கொண்டு வரப்பட்டது. ஸ்டார்ஷிப் நிறுவனம் அதன் நிறுவனத்தில் 1,000க்கும் மேற்பட்ட ரோபோக்களைக் தயாரித்து வருகிறது. இது 2019ம் ஆண்டில் வெறும் 250 ஆக இருந்தது. மேலும் அதில் நூற்றுக்கணக்கானவை விரைவில் பயன்படுத்தப்படும் எனவும், தற்போது 20 அமெரிக்க வளாகங்களில் உணவு விநியோகம் செய்து வருகின்றன" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் 25 உணவுகளில் இந்த ரோபோக்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இதுதவிர இந்த ரோபோக்கள் இங்கிலாந்தின் மில்டன் கெய்ன்ஸில் நடைபாதைகளிலும், மொடெஸ்டோ, கலிபோர்னியா போன்ற பகுதிகளிலும் வலம் வருகின்றன. இருப்பினும், இந்த ரோபோக்கள் அனைத்தும் வடிவமைப்புகளில் வேறுபடுகின்றன. சில சமயங்களில் நான்கு சக்கரங்கள் மற்றும் சிலவற்றில் ஆறுbசக்கரங்கள் உள்ளன. அதேபோல, இந்த ரோபோக்கள் அனைத்தும் கேமராக்கள், சென்சார்கள், GPS மற்றும் சில சமயங்களில் லேசர் ஸ்கேனர்களைப் பயன்படுத்தி நடைபாதைகளில் செல்லவும் மற்றும் தெருக்களைத் தன்னாட்சி முறையில் தானாக கடக்கின்றன. இந்த ரோபோக்கள் அனைத்தும் 5 மைல் வேகத்தில் நகரும்.

Input & Image courtesy:News 18



Next Story
கதிர் தொகுப்பு
Trending News