Kathir News
Begin typing your search above and press return to search.

ரஷ்யாவில் ஊடக செய்திகளில் கட்டுப்பாடு: உக்ரைன் குறித்த கருத்துக்கள் வேண்டாம்!

ரஷ்யாவில் உள்ள ஊடகங்களில் தற்போது உக்ரைன் போர் குறித்த தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும் கூறியுள்ளது.

ரஷ்யாவில் ஊடக செய்திகளில் கட்டுப்பாடு: உக்ரைன் குறித்த கருத்துக்கள் வேண்டாம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  4 March 2022 2:45 PM GMT

ரஷ்யாவில் உள்ள பல்வேறு ஊடகங்களுக்கு குறிப்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி காட்சிகள் போன்றவற்றிற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஊடகங்களில் ஒன்றான ரெயின் டிவி சேனல் தற்காலிக பணியை நிறுத்துவதாக அறிவித்தது. ரஷ்ய தொலைக்காட்சி சேனல் TV Rain உக்ரைன் மீதான மாஸ்கோவின் படையெடுப்பு பற்றிய தகவல்களைக் கொடுத்த அதிகாரிகளால் நடவடிக்கைகள் மூலம் உத்தரவிட்டதை அடுத்து, அதன் செயல்பாடுகளை இடைநிறுத்தியுள்ளது. இந்த தொலைக்காட்சி சேனல் நேரடி ஒளிபரப்பு நடத்திய ஊழியர் ஒருவர் அதனுடைய கடைசி நிமிடங்களில் போர் வேண்டாம் நிறுத்தலாம் என்பது போல் வார்த்தைகளை உபயோகித்தால் இதுபோன்று நடந்தது.


ரஷ்யாவின் சுதந்திர செய்தி நிறுவனங்களில் ஒன்றான லிபரல் சேனலின் பத்திரிகையாளர்கள் அமைதிக்கான நிலைப்பாட்டை எடுக்க முடிவு செய்தனர். சேனலின் நிறுவனர்களில் ஒருவரான நடாலியா சிந்தேவா என்பவர், "போர் வேண்டாம்" என்று ஊழியர்கள் ஸ்டுடியோவில் இருந்து வெளிநடப்பு செய்தனர். முன்னதாக, அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் வழங்கிய தகவல்களை மட்டுமே வெளியிடுமாறு ரஷ்ய ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது . தாக்குதல், படையெடுப்பு, போர் போன்ற வார்த்தைகளை உக்ரைன் நெருக்கடியை விவரிக்க காட்ட ஊடக நிறுவனங்களும் தடை செய்யப்பட்டுள்ளன என்று லாட்வியாவை தளமாகக் கொண்ட ரஷ்ய செய்தி இணையதளமான மெடுசாவை மேற்கோள் காட்டி கார்டியன் அறிக்கை தெரிவித்துள்ளது.


மேலும் இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் படி, ரஷ்யாவின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஏற்கனவே வாரத்தின் தொடக்கத்தில் தொலைக்காட்சி நிலையத்தின் ஊழியர்கள் சிலர் தங்கள் சொந்த பாதுகாப்புக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் உக்ரைன் மக்கள் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகளும் கிளம்பின. எனவே ரஷ்யாவில் உள்ள செய்தி நிறுவனங்கள் குறித்த அதிகார பூர்வமான தகவல்களை தவிர வேறு எந்த தகவல்களை வெளியிட கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப் பட்டுள்ளது.

Input & Image courtesy: Indian Express

Next Story
கதிர் தொகுப்பு
Trending News