பாலைவனத்தில் ஏற்பட்ட பனிப்பொழிவு: அரிய காட்சிகளை ரசிக்கும் மக்கள்!
பாலைவனமாக காட்சி அளிக்கும் சவுதி அரேபியாவில் தற்பொழுது மிகப்பெரிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
By : Bharathi Latha
மிகவும் வெப்பமான பகுதியாகவும் காட்சி தரும் சவுதி அரேபியா தற்பொழுது முதன்முதலாக மிகப்பெரிய பனிப்பொழிவு எதிர்கொண்டு உள்ளது. மேலும் சவுதி அரேபியாவில் உள்ள நகரமான தபூக் பகுதியில் புத்தாண்டு தினத்தன்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதியில் உள்ள மக்கள் இதுவரையில் இந்த மாதிரியான பனிப் பொழிவை பார்த்தது இல்லை என்றும் கூறுகிறார்கள். இனி பனிப்பொழிவில் அந்த பகுதியில் உள்ள மக்கள் பாரம்பரிய நடனத்தை ஆடுகிறார்கள் மேல் இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் சவுதி அரேபியாவில் உள்ள மலை இந்த பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் வெள்ளை படலம் சூழ்ந்த சவுதி அரேபியா தற்போது குளிர்பிரதேசம் பகுதி போல காட்சியளிக்கிறது. மேலும் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜபல் அல்-லாஜ், ஜபல் அல்-தாஹிர் மற்றும் ஜபல் அல்கான் ஆகிய மலைகள் முற்றிலுமாக பனியால் சூழப்பட்டுள்ளது.
வளைகுடா நாடுகளில் இப்படி கடுமையான பனிப்பொழிவு ஏற்படுவது மிகவும் அரிதான செயலாக இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள். மேலும் இதன் காரணமாக இன்று பகல் பொழுதில் மைனஸ் டிகிரி அளவிற்கு கடும் குளிர் உள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். தபூக் அருகே அமைந்துள்ள அல்-லாட்ஜ் மலையில் இந்த பனிப்பொழிவை அனுபவிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Zee news