Kathir News
Begin typing your search above and press return to search.

பொது மற்றும் சரக்கு போக்குவரத்தை 100 சதவீதம் பசுமை எரிசக்தி : இந்தியாவை வேற லெவலில் கட்டமைக்கப்போகும் மத்திய அரசின் திட்டம் !

shift public transport and logistics on 100 percent green and clean sources of energy

பொது மற்றும் சரக்கு போக்குவரத்தை 100 சதவீதம் பசுமை எரிசக்தி : இந்தியாவை வேற லெவலில் கட்டமைக்கப்போகும் மத்திய அரசின் திட்டம் !

MuruganandhamBy : Muruganandham

  |  2 Oct 2021 2:24 AM GMT

பொது மற்றும் சரக்கு போக்குவரத்தை 100 சதவீதம் பசுமை மற்றும் தூய்மை எரிசக்தி ஆதாரங்களுக்கு மாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்நிதின் கட்கரி கூறினார்.

சர்வதேச வாகன தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கில் உரையாற்றிய அவர், பிரதமரால் தொடங்கப்பட்ட தேசிய ஹைட்ரஜன் இயக்கம், போக்குவரத்து துறையின் நலனை கருத்தில் கொண்டு பசுமை ஹைட்ரஜனின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் இந்தியாவை முன்னிலைப்படுத்த முயல்கிறது என்றார்.

70 சதவீத பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செலவுகள் மின்சார செலவுகளிலிருந்து வருகின்றன. எனவே, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து வரும் உபரி மின்சாரம் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியின் பொருளாதாரத்தை முற்றிலும் மாற்றும். பசுமை ஹைட்ரஜன் எதிர்கால எரிபொருள் என்று அழைக்கப்படுகிறது, மேலும், "பூஜ்ய கார்பன் உமிழ்வு" என்ற இலக்கை அடைய உதவும் ஒரே எரிபொருள் இது என்றும் அவர் கூறினார்.

புதைபடிவ எரிபொருள் உமிழ்வைக் குறைக்க உதவும் நோக்கில் இந்திய வாகனத் துறையில் 'மேம்பட்ட தொழில்நுட்பத் தயாரிப்புகளை' அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டதாக மத்திய அமைச்சர் கூறினார். ரூ 42,500 கோடிக்கும் அதிகமான புதிய முதலீடுகளையும் கூடுதலாக 7.5 லட்சம் வேலைவாய்ப்புகளையும் இந்த திட்டம் உருவாக்கும் என்று அரசு எதிர்பார்ப்பதாக கட்கரி கூறினார்.

பொதுப் போக்குவரத்தைப் பொறுத்தவரை, இறக்குமதிக்கு மாற்றான, செலவு குறைந்த, மாசு இல்லாத உள்நாட்டு போக்குவரத்து தீர்வுகளை உருவாக்கி, எரிபொருள் இறக்குமதிகள் மீது இந்தியா சார்ந்திருப்பதை குறைப்பது காலத்தின் தேவையாகும் என்று அமைச்சர் கூறினார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News