சீர்காழியில் வரலாறு காணாத மழை - நேரில் சென்று பார்வையிடாத தி.மு.க எம்.எல்.ஏ
சீர்காழி அடுத்து உள்ள சூரக்காடு கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது ஆய்வு பணியை மேற்கொள்ளாத தி.மு.க எம்.எல்.ஏ.,
By : Bharathi Latha
சீர்காழி அடுத்து உள்ள சூரக்காடு என்ற கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கிறது. இங்கு தற்பொழுது வரலாறு ஆனது மழை பெய்து இருப்பதன் காரணமாக இடுப்பு அளவிற்கு தண்ணீர் நிற்கிறது. அனைத்து வீடுகளிலும் வெள்ளம் சூழ்ந்து கொண்டு கிராமத்தில் உள்ள மக்களை வெளியேறும் படி செய்து இருக்கிறது. ஆனால் இந்த மக்களுக்காக தற்போது வரை நிவாரண முகாம்கள் எதுவும் அமைக்கப்படவில்லை என்று மக்கள் கூறுகிறார்கள்.
இடுப்பு அளவிற்கு மேல் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அனைத்து வீடுகளிலும் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தாங்களே சென்று கொண்டு இருக்கும் ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக அவர்கள் காலை, மாலை, இரவு என்று சாப்பிடாமல் தண்ணீரில் நிறைந்த படி தங்களின் உயிர்களை காப்பாற்றினால் மட்டும் போதும் என்று நினைப்புடன் பயணத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் இவர்கள் பற்றி கண்டுகொள்ளவில்லை என்று குற்றச்சாட்டை கிராம மக்கள் முன் வைத்து இருக்கிறார்கள்.
இந்த கிராமத்தில் உள்ள மக்கள் தங்களுக்கான உரிமைகளை தற்போது கூறி இருக்கிறார்கள். தற்காலிக முகாம்கள் கூட மாவட்டம் நிர்வாக சார்பில் அமைக்கப் படவில்லை. தி.மு.க சார்பில் எந்தவொரு எம்.எல்.ஏ.வும் எங்கள் பகுதியில் வந்து ஆய்வு மேற்கொள்ளவில்லை. வருவாய் நிர்வாகம் சார்பில் நிவாரண பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கிராம மக்கள் தற்போது கோரிக்கையும் முன்வைத்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News