Kathir News
Begin typing your search above and press return to search.

மொபைலில் கேம் விளையாடி தவறுதலாக ரூ.64,900-க்கு இதை ஆர்டர் செய்த சிறுவன்!

மொபைல் கேம் மூலம் தவறுதலாக 64,900 ரூபாய்க்கு ஐஸ்கிரீம் மற்றும் கேக்கை ஆர்டர் செய்த சிறுவன்.

மொபைலில் கேம் விளையாடி தவறுதலாக ரூ.64,900-க்கு இதை ஆர்டர் செய்த சிறுவன்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 Dec 2021 1:17 PM GMT

குழந்தைகள் என்றாலே எப்போதும் கலகலப்பும் கொண்டாட்டமும் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இன்றைய டிஜிட்டல் உலகில குழந்தைகளை பாதுகாப்பாக வழிநடத்த வேண்டும். குறிப்பாக அவர்கள் கையில் இருக்கும் தொலைபேசி அவர்களை பல்வேறு செயல்களையும் புரிய வைக்கிறது அவர்களுக்கு தெரியாத பல விஷயங்களை அவர்கள் மொபைல் போனில் செய்கிறார்கள். குறிப்பாக உணவு ஆர்டர் செய்வது முதல் பல்வேறு போஸ்டர்களை இன்ஸ்டாகிராமில் போடுவது வரை.


பல குழந்தைகள் தங்களது பெற்றோர்களின் மொபைல் போனை பயன்படுத்தி தவறான கேம் அல்லது வீடியோவை பார்த்து விடுகின்றனர். இப்படி ஒரு சம்பவம் தான் வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது. 5 வயது சிறுவன் ஒருவன் தனது அப்பாவின் மொபைலில் எப்போதும் போல ஜாலியாக கேம் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்போது தவறுதலாக உபர் டெலிவரி ஆப்பை பயன்படுத்தி பல உணவு பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அதில் உள்ள ஐஸ்கிரீம், கேக்குகள், இன்னும் பல இனிப்பு பண்டங்கள் போன்றவற்றை அந்த சிறுவன் ஆர்டர் செய்துள்ளார்.


ஆர்டர் செய்வதையும் ஏதோ ஒரு கேம் என்று நினைத்து கொண்டு இவ்வாறு செய்து விட்டான். இதன்படி சுமார் 1200 டாலர் மதிப்புள்ள ஐஸ்கிரீம் மற்றும் பல இனிப்பு பண்டங்களை அந்த சிறுவன் ஆர்டர் செய்துள்ளான். இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.64,900 ஆகும். அவரின் அப்பாவின் மொபைலில் இருந்து ஆர்டர் செய்ததால் இந்த உணவு பொருட்கள் அனைத்தும் அவரின் அலுவலக முகவரிக்கு ஆர்டர் செய்யப்பட்டது. ஆர்டர் பெறப்பட்டதும் இந்த சிறுவனின் அப்பாவிற்கு மெசேஜ் வந்துள்ளது. இதை பார்த்ததும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. யார் இவ்வளவு உணவுகளை ஆர்டர் செய்தார் என்று அவர் குழம்பி உள்ளார். பிறகு தன்னுடைய மகன் தான் இந்த வேலையை செய்தான் என்று தெரியவந்து அந்த அத்தனை உணவிற்கும் பணம் கொடுத்து அவற்றை வாங்கியுள்ளார் அந்த தந்தை. குழந்தைகளிடம் மொபைலை கொடுக்கும்போது மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு நினைவுப்படுத்துகிறது.

Input & Image courtesy: Times now news




Next Story
கதிர் தொகுப்பு
Trending News