Kathir News
Begin typing your search above and press return to search.

SMaRT MEDIA FEST 2021: ஒரே ஆண்டில் 80 மில்லியனுக்கும் அதிகமான வாசிப்புகள்.. SMaRT அமைப்பின் கீழ் அணி திரளும் தேசிய ஊடகங்கள்..!

SMaRT MEDIA FEST 2021

SMaRT MEDIA FEST 2021: ஒரே ஆண்டில் 80 மில்லியனுக்கும் அதிகமான வாசிப்புகள்.. SMaRT அமைப்பின் கீழ் அணி திரளும் தேசிய ஊடகங்கள்..!

MuruganandhamBy : Muruganandham

  |  14 Oct 2021 12:57 PM GMT

சமாச்சார் மன்யாதா சங்கம் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (SMaRT) அமைப்பு சார்பில், முதல் தேசியவாத ஊடக விழா 2021 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமாச்சார் மன்யாதா சங்கம் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (SMaRT) என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது நாட்டின் நலனுக்காக உருவாக்கப்பட்டது. SMaRT என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை ஊக்குவிப்பதற்காகவும், அது குறித்த தகவல்களை வாதிடுவதற்காகவும் தேசியவாத ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது. 85க்கும் மேற்பட்ட ஊடகங்கள் இதில் இணைந்துள்ளன. ஒட்டுமொத்த வலைதள பார்வையாளர்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் 80 மில்லியனுக்கும் அதிகமான வாசகர்களை கொண்டுள்ளது.

SMaRT அதன் உறுப்பினர்களின் உள்ளட தரத்தை மேம்படுத்துவதற்கும், அதன் பரவலை விரிவுபடுத்துவதற்கும், நிதி நிலைத்தன்மையை அடைய உதவுவதற்கும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த முயற்சிகளில் ஆராய்ச்சி மானியங்கள், மொழிபெயர்ப்பு சேவைகள், சட்ட ஆதரவு, உயர்தர உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான மல்டிமீடியா வசதிகள், தொடக்க நிதி, விளம்பர ஆதரவு மற்றும் பல அடங்கும்.

தற்போது SMaRT அமைப்பு, "1-வது தேசியவாத ஊடக விழா 2021" ஏற்பாடு செய்துள்ளது. அக்டோபர் 2020 இல் தொடங்கப்பட்டதிலிருந்து முதல் ஆண்டு நிறைவை ஒட்டி, ஆன்லைன் நிகழ்வை முன்னெடுத்துள்ளது. இது மூன்று நாட்கள் நடைபெறும். அக்டோபர் 15 முதல் 17 வரை பல்வேறு ஊடக பிரபலங்கள் கலந்துரையாடப்போகின்றனர். தேசிய முக்கியத்துவம் மற்றும் தர்மம் என்ற தலைப்பில் பல்வேறு ஸ்பெக்ட்ரம்களைச் சேர்ந்த பிரபல பேச்சாளர்கள் நிகழ்ச்சியில் உரையாற்றுவார்கள்.

விவாதங்களை தொடர்ந்து விருதுகளும் வழங்கப்பட உள்ளது. இது குறித்து மேலும் அறிந்து கொள்ள பின்வரும் இணையதள இணைப்பை கிளிக் செய்து பார்வையிடலாம்.

https://smartmediafest.eventvirtually.com/




Next Story
கதிர் தொகுப்பு
Trending News