சிம்பன்சி மீன்களுக்கு உணவளிக்கும் வீடியோ: பதிவிட்ட வனத்துறை அதிகாரி !
சிம்பன்சி ஒன்று மீன்களுக்கு உணவளிக்கும் வீடியோவை வனத்துறை அதிகாரி தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
By : Bharathi Latha
இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும் மற்ற உயிர்களிடம் காட்டும் அக்கறையை கொண்ட காரணத்தினால் தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தற்போது மனிதர்களுக்கு இணையாக விளங்கக்கூடிய சிம்பான்சி ஒன்று கீழே நீரில் நீந்தி கொண்டிருக்கும் மீன்களுக்கு உணவளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
குறிப்பாக அவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் பூங்கா போன்று இருக்கும் அந்த பகுதியில் மரப்பலகையில் அமர்ந்திருக்கும் மனித குரங்கு ஒன்று கீழே நீரில் நீந்தி கொண்டிருக்கும் மீன்களுக்கு உணவளித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில், மரபாலத்தின் மீது அமர்ந்து இருந்த மனித குரங்கு ஒன்று தனது அருகில் மீன்களுக்கான உணவுகள் வைத்துக் கொண்டு அமர்ந்து உள்ளது. உணவுகளை தனது கைகளில் எடுத்து நீரில் உணவினை போடுகின்றது. உடனே கூட்டம் கூட்டமாக மீன்கள் வந்து இரையை உண்கின்றது.
மனிதன் செய்யக்கூடிய செயல்களை அப்படியே பிரதிபலிக்கும் சிம்பான்சி, மீன்களுக்கு தனது கையால் உணவளிக்கும் இந்த வீடியோ பற்றி பல்வேறு நபர் தங்களுடைய கருத்துக்களையும் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Input & Image courtesy: News18