84 வயது தாயின் ஆசையை நிறைவேற்றிய பாசமகள்: வைரலாகும் வீடியோ !
விமானம் ஓட்ட வேண்டும் என்ற ஆசையை 84 வயதில் நிறைவேற்றிய பாசமகள் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
By : Bharathi Latha
அமெரிக்காவைச் சேர்ந்த மிர்தா கேஜ்ஜூக்கு 84 வயதாகிறது. இளம் வயதில் விமான ஓட்டியாக இருந்த அவர் தற்போது பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை தற்போது நாளுக்கு நாள் மோசமாகி வரும் காரணத்தினால் தனது தாயின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற காரணத்தில் மகள் ஏர்ல் அதற்கான முதல் முயற்சியை எடுத்துள்ளார். அதன்படி, மிர்தா கேஜ் இளம் வயதில் விமான ஓட்டியாக இருந்ததால், விமானத்தில் அழைத்துச் செல்லவும், சிறிது நேரம் விமானத்தை இயக்கவும் உரிய ஏற்பாடுகளை அவர் செய்தார்.
இதற்காக, மாட்டியெல்லோ என்ற விமானியைத் தொடர்பு கொண்ட அவர், தனது தாயின் நிலையை எடுத்துக் கூறியுள்ளார். அவரும் மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டு மிர்தா கேஜை விமானத்தில் அழைத்துச் சென்றார். வின்னி பெசாகி ஏரி மற்றும் மவுண்ட் கியர்சார்ஜ் ஆகிய இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் மிர்தா கேஜை அமரவைத்து விமானத்தில் சுற்றிக்காட்டியுள்ளனர். அந்த பயணத்தின்போது விமானத்தின் முழு இயகத்தையும் மிர்தா கேஜிடம், மாட்டியெல்லா சிறிது நேரத்துக்கு ஒப்படைத்துள்ளார். இந்த அனுபவம் தாய்க்கு மிகச்சிறந்ததாக இருந்ததாகவும், அவரின் ஆசை நிறைவேறி இருப்பதாகவும் மகன் ஏர்ல் கோடி தெரிவித்தார்.
இது குறித்து மிர்தா கேஜின் மகன் ஏர்ல் கூறுகையில், "எனது தாய்க்கு தற்போது 84 வயதாகிறது. அவர் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நாளுக்கு நாள் அவருடைய உடல்நிலை மோசமாகி வருவதால், தாய்க்கு பிடித்தமான விஷயங்களை செய்து கொடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் எண்ணினோம். அவர் இளம் வயதில் விமான ஓட்டியாக இருந்ததால், ஒருமுறை விமானத்தில் அழைத்துச் செல்ல முடிவெடுத்தோம். அதற்காக வின்னி பெசாகி ஏரி, மவுண்ட் கியர்சார்ஜ் ஆகிய பகுதிகளை சுற்றிக் காட்டியபோது, தாய் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்" என்று கூறினார்.
Input & Image courtesy:Timesnowindia