உலகிலேயே முதல் நபராக 3D மூலம் செயற்கைக் கண் பெற்றவர் இவர் தான் !
உலகின் முதல் நபராக 3D பிரின்ட் மூலம் செயற்கைக் கண் பெற்றவர் ஸ்டீவ் வெர்ஸ் என்பவர் தான்.
By : Bharathi Latha
உலகில் தொழில்நுட்பப் பயன்பாடு என்பது பல்வேறு அதிசயங்களை செய்து வருகிறது. அவற்றில் முக்கியமான டெக்னிக் 3D பிரின்ட் உடல் உறுப்புகள் மற்றும் பாகங்கள். முன்பு வரை புத்தகங்கள் மற்றும் ஆய்வுகள் என்ற அளவிலேயே இருந்த இந்த தொழில்நுட்பம் என்பது தற்போது புதிய சாதனையை உருவாக்கியுள்ளது. முதன் முதலாக 3D பிரிண்ட் செய்யப்பட்ட செயற்கை கண்களை பெற்ற நபர் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறார். எப்பொழுதும் முதலில் வருபவர்களுக்கு தான் உலகம் முன்னுரிமை கொடுக்கின்றது என்பது வழக்கம்.
அதேபோல முதல் முதலாக 3D பிரிண்ட் செய்யப்பட்ட செயற்கை கண்ணை பெற்றவர் ஸ்டீவ் வெர்ஸ் பிரிட்டனைச் சேர்ந்த 40 வயதான பொறியாளர். 3D பிரிண்ட் செய்யப்பட்ட முழுமையான டிஜிட்டல் செயற்கை கண்ணை பெற்ற முதல் நபர் இவர் தான். லண்டனில் உள்ள மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனையின் கிளினிக்கல் சோதனையின் பகுதியாக 3D பிரிண்ட் செயற்கை கண் பொருத்தப்பட்டுள்ளது. பிறக்கும் போதே கண்கள் முழுமையாக் வளர்ச்சி அடையவில்லை என்றாலோ அல்லது விபத்து, காயம் அல்லது கண்களில் கேன்சர் ஏற்படுவது உள்ளிட்ட பிற காரணங்களால் கண்கள் தீவிரமான பாதிப்பு அடைந்தாலோ, செயற்கை கண்கள் உதவியாக இருக்கும். மனிதர்களின் இயற்கையான கண்களைப் போலவே உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக் கண்ணை பயோமிமிக் என்று அழைக்கிறார்கள்.
பாரம்பரிய முறைப்படி, செயற்கைக் கண்களை உருவாக்க தேவைப்படும் நேரத்தை ஒப்பிடும் போது, இந்த 3D குறைவான நேரத்தில் உருவாக்கப் படுகிறது. பாரம்பரிய அக்ரிலிக் செயற்கைக் கண்கள் கையால் வரையப்பட்டவை மற்றும் அதனை முடிப்பதற்கு குறைந்தபட்சம் ஆறு வாரங்கள் தேவைப்படும். 3D பிரிண்டிங் மூலம், கண்களின் அளவு துல்லியமாக ஸ்கேன் செய்யப்படுகிறது. ஒருமுறை ஸ்கேன் செய்தவுடன், ஸ்கேன் செய்யப்பட்ட கண்களின் ஃபைல்கள் ஜெர்மனியில் உள்ள 3D பிரிண்டிங் செய்யும் இடத்திற்கு அமைக்கப்படுகிறது.
Input & Image courtesy: Engadget