Kathir News
Begin typing your search above and press return to search.

சிங்கம் மாதிரி வீதிகளில் வலம்வரும் நாய்: வைரலாகும் வீடியோ !

சிங்கம் மாதிரி வீதிகளில் வலம் வரும் குறும்புக்கார நாய், சமூக வலைதளங்களில் வைரலாக வீடியோ.

சிங்கம் மாதிரி வீதிகளில் வலம்வரும் நாய்: வைரலாகும் வீடியோ !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  13 Nov 2021 2:06 PM GMT

சமீபத்திய வைரல் வீடியோவில் ஒரு நாய் சிங்கம் உருவத்தில் அசாதாரணமாக நடந்து சென்றது. சிங்கம் போன்ற மேனியானது அங்கிருந்தவர்களுக்கு உண்மையான பயத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஒரு நல்ல உருமறைப்புடன் வருகிறது. குறிப்பாக 12 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ கிளிப்பில், மனிதர்கள் நிறைந்த ஒரு மைதானத்தின் நடுவில் எங்கிருந்தோ ஒரு சிங்கம் திடீரென நுழைகிறது. ஆனால் அது உண்மையில் சிங்கம் அல்ல, ஒரு நாய்க்கு சிங்கம் போல வேடம் போடப்பட்டுள்ளது. சிங்கத்தின் மேனி போலவே ஒரு பெரிய பழுப்பு நிற கேன்ஸ் அணிவிக்கப்பட்டுள்ளதால், சிங்கத்தின் முன்புற தோற்றத்தை ஒத்து காணப்படுகிறது.


இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. இந்த வீடியோவில் சிங்கம் போல மாறுவேடம் போடப்பட்டுள்ள நாய் கூட்டத்திற்குள் திடீரென நுழையும் போது அங்கிருந்தவர்கள் யாரும் அதனை பார்த்து பயம் கொள்ளவில்லை. மாறாக அனைவரும் அவர்களது வேலைகளை செய்துகொண்டு இயல்பாக இருந்தனர். இதனால் அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் வீடியோவில் இருப்பது நாய் தான் என்ற தகவல் தெரிந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




இந்த சிங்கம் உருவத்தில் இருக்கும் நாய் நிறைய பேரை பயமுறுத்தும் என்றும் கிட்டத்தட்ட இது ஒரு ஒல்லியான சிங்கம் என்று நினைத்தேன் என்றும் சுவாரஸ்யமான கருத்துகள் வந்தவண்ணம் உள்ளது. இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர். இந்த வீடியோ கிட்டத்தட்ட 40 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது.

Input & Image courtesy:Instagram post


Next Story
கதிர் தொகுப்பு
Trending News