பிரபலமான ஸ்போர்டிபை நிறுவனத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு!
பிரபல மியூசிக் நிறுவனமான ஸ்போர்டிபை நிறுவனத்திற்கு மூன்று நாட்களில் ஏற்பட்ட 200 கோடி இழப்பு.
By : Bharathi Latha
தற்பொழுது இந்தியாவில் குறிப்பாக இந்த கால கட்டங்களில் அதிக நபர்களின் பதிவிறக்கம் செய்த ஆப் ஆக ஸ்போர்டிபை முக்கியமாக இருந்து வருகிறது. மேலும் இசையை விரும்பும் நபர்கள், பாடல்களை கேட்க விரும்பும் நபர்கள் இதற்கு அடிமையாக இருக்கிறார்கள் என்று கூறலாம் அந்த அளவிற்கு இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இளையராஜா பாடல்கள் முதல் தற்போது இருக்கும் பிரபல பாடல்கள் வரை அனைத்தும் இந்த ஒரு செயலியில் கிடைக்கிறது. இதனால் இதன் லாபம் பல மடங்கு உயர்ந்தது. ஆனால் சமீபத்தில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3 நாட்களில் ரூ 200 கோடியை இழப்பு உள்ளது.
ஸ்வீடனை தலைமையகமாக கொண்ட ஸ்போடிபை நிறுவனம் ஆன்லைன் மியூசிக் ஸ்ட்ரீமிங் மற்றும் போட்காஸ்ட் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சேவைகளை நடத்தி வருகிறது. ஆன்லைன் போட்காஸ்ட் நிகழ்ச்சிகளை வழங்கி, அதன் மூலம் பிரபலம் அடைந்தவரான ஜோ ரோகனின் சமீபத்திய நிகழ்ச்சிகள் பல சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் இவர் சமீபத்தில் பதிவிட்டுள்ள ஒரு வீடியோவில் பருவ மாற்றம் என்பது சுத்தமான ஒரு பொய். எனவே மக்கள் அதை நம்ப வேண்டாம் என்பது போன்ற வார்த்தைகளை உபயோகித்து உள்ளார். இதன் காரணமாக இந்த வீடியோ கண்டனத்திற்கு உள்ளானது.
இந்த வீடியோ காட்சி தொடர்ந்து இந்த நிறுவனத்தின் லாபம் சுமார் மூன்று நாட்களில் 200 கோடி வரை குறைந்துள்ளது. அதுமட்டுமில்லாது இவர் இந்த நோய் தொற்று பற்றி அரசாங்கம் மக்களிடம் பயத்தை ஏற்படுத்துகிறது.கவசம் அணிய வேண்டாம் மற்றும் தடுப்பூசி செலுத்த வேண்டாம் என்பது போன்ற வார்த்தைகளை உபயோகித்து உள்ளார். எனவே இதன் காரணமாக உலகம் முழுவதிலும் இருந்த இவருடைய இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
Input & Image courtesy: News 18