Kathir News
Begin typing your search above and press return to search.

அரசுப் பள்ளியில் ஹிந்தி ஆசிரியரை கொடுமைப்படுத்திய மாணவர்கள் - வகுப்பறைகளில் தலைதூக்கும் "குட்கா" காலாச்சாரம்!

Students bully Hindi teacher at government school in Karnataka, lead to outrage

அரசுப் பள்ளியில் ஹிந்தி ஆசிரியரை கொடுமைப்படுத்திய மாணவர்கள் - வகுப்பறைகளில் தலைதூக்கும் குட்கா காலாச்சாரம்!
X

MuruganandhamBy : Muruganandham

  |  11 Dec 2021 1:42 PM GMT

கர்நாடக மாநிலம் தாவங்கரே மாவட்டம், சன்னகிரி தாலுகாவிலுள்ள நல்லூரில் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் 5 பேர், ஹிந்தி ஆசிரியரிடம் தவறாக நடந்து கொண்ட வீடியோ வைரலாக பரவியது. கடந்த திங்கட்கிழமை நடந்த இந்த சம்பவம், வியாழன் முதல் அனைத்து சமூக ஊடக தளங்களிலும் பரவி சீற்றத்தை ஏற்படுத்தியது. இந்த மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி நிர்வாகத்தின் கூற்றுப்படி, சமீபத்தில் ஹாவேரி மாவட்டத்தில் இருந்து பணியிடம் மாற்றம் பெற்ற ஆசிரியர் பிரகாஷ், வகுப்பை நடத்திக்கொண்டிருந்தபோது, ​​​​ஒரு மாணவர் அவரை குப்பைத் தொட்டியால் அடிக்க முயன்றார். பின்னர் அவரது தலையில் குப்பைத் தொட்டியை வைத்தார். குட்கா சாப்பிட்டு வகுப்பறையில் குப்பை கொட்டும் மாணவர்களை கண்டித்த ஆசிரியர் பிரகாஷ், அவர்களை ஒழுக்கத்தை கடைபிடிக்குமாறு கூறியுள்ளார். அதற்கு மாணவர்கள் அவ்வாறு செய்துள்ளனர்.

சில மாணவர்கள் குட்காவை உட்கொள்வதாகவும், வகுப்பறைகளின் புனிதத்தைப் பேணுமாறு நான் அவர்களுக்கு அறிவுறுத்தியபோது, ​​அவர்கள் என்னிடம் தகராறு செய்து, என் மீது குப்பை கூடையைப் போட்டதாகவும் ஆசிரியர் பிரகாஷ் கூறினார். மேலும் நான் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு என் வகுப்புகளைத் தொடர்ந்தேன். மாணவர்களும் தொடர்ந்து வகுப்புகளுக்கு வந்தனர். இருப்பினும், வியாழக்கிழமை இந்த சம்பவம் வைரலானபோது, ​​​​மாணவர்கள் வரவில்லை. பிரச்சனைக்கு பயந்து, எம்.எல்.ஏ., டி.டி.பி.ஐ., வந்தாலும் புகார் கொடுக்க வேண்டாம் என முடிவு செய்தேன் என பிரகாஷ் கூறினார்.

எம்எல்ஏ மடல் விருபாக்ஷப்பா மற்றும் டிடிபிஐ திப்பேசுவாமி ஆகியோர் பள்ளிக்கு விரைந்து வந்து ஊழியர்களுடன் கலந்துரையாடினர். எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று மாணவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொள்ள முடிவு செய்தனர். மேலும் அவர்களின் எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் போலீசில் புகார் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தனர்.

இந்நிலையில், மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும் வகையில் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். டிடிபிஐயிடம் இருந்து அறிக்கை சேகரித்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக துணை கமிஷனர் மகாந்தேஷ் பிலாகி தெரிவித்தார்



Next Story
கதிர் தொகுப்பு
Trending News