Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ்நாடு: திருமணத்தில் நடனமாடிய மணப்பெண், நிராகரித்த மணமகன்!

திருமண விழாவில் நடனமாடியதற்காக மணமகன் அறைந்ததை அடுத்து, தமிழ்நாட்டுப் பெண் தனது உறவினர் ஒருவரை மணந்து கொண்டார்.

தமிழ்நாடு: திருமணத்தில் நடனமாடிய மணப்பெண், நிராகரித்த மணமகன்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 Jan 2022 1:54 PM GMT

தமிழ்நாட்டில் பெரும்பாலும் தற்பொழுது நடத்தப்படும் திருமணங்களில் பல்வேறு கலாச்சாரங்கள் கடைபிடிக்க படுகிறார்கள். குறிப்பாக அவர்கள் அணிந்து கொள்ளும் உடைகளில் இருந்து அவர்கள் மேற்கொள்ளும், ஒவ்வொரு சடங்குகளில் புதுமைகளை புகுத்தும் என்ற பெயரில் பல்வேறு வித்தியாசமான செயல்களில் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில் மெஹந்தி பங்க்ஷன், பிரீ வெடிங் ஷூட், ஆடலுக்கு பாடல் நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் திருமண விழாவில் அரங்கேற்றுகிறார்கள். இத்தகைய நிகழ்ச்சிகளில் மணப்பெண்ணும் கலந்துகொண்டு நடனம் புரிகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.


அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் நடந்த திருமண விழாவில் மணப்பெண் ஆடிய ஒரு காரணத்திற்காக, மணமகன் அந்த பெண்ணை அனைவர் முன்னிலையிலும் கன்னத்தில் அறைந்துள்ளார். ஜனவரி 20ஆம் தேதி நடைபெற இருந்த கல்யாணத்தில் முன்தினம் நிச்சயதார்த்த விழாவில் மணமகள் நடனமாடிய விதம் பிடிக்காத காரணத்தினால் மணமகன் இப்படி செய்ததாகவும் கூறப்படுகிறது. ஏன் இப்படி செய்தாய்? என்று வாக்குவாதத்தில் தொடங்கிய விவாதம் பின் பெரும் பிரச்சினையில் ஏற்படுத்தியதை தொடர்ந்து அவர் கையை உயர்த்தியதாக கூறப்படுகிறது.


மேலும் மணப்பெண்ணின் தந்தை முன்பு இந்த செயல் நடைபெற்றதால் மிகவும் கோபமடைந்த தந்தை, இந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார். மேலும் மணமகன் மற்றும் அவருடைய வீட்டாரையும் திருமணத்தில் இருந்து வெளியேறுமாறு அவர் கேட்டுக்கொண்டார் மகளுக்கு திருமணம் நடைபெற வேண்டும் என்ற நோக்கில் தன்னுடைய உறவுக்காரர் ஒருவருக்கும், தன்னுடைய மகளுக்கும் திருமணத்தை குறித்த தேதியில் முடித்துள்ளார்கள்.

Input & Image courtesy: News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News