Kathir News
Begin typing your search above and press return to search.

உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்: மகனை மீட்க பிரார்த்தனை செய்யும் தாய்!

ஊரடங்கின் போது 1400 கிமீ பயணம் செய்து மகனைக் காப்பாற்றிய தெலுங்கானா பெண் தற்போது தன் மகன் உக்ரைனில் இருந்து திரும்புவதற்காக காத்திருக்கிறார்.

உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்: மகனை மீட்க பிரார்த்தனை செய்யும் தாய்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  7 March 2022 1:34 AM GMT

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரஸியா பேகத்தின் 21 வயது மகன் முகமது நிஜாமுதீன் அமான் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் தற்போது சிக்கிக் கொண்டுள்ளார். கொரோனா ஏற்பட்ட காலங்களில் ஊரடங்கு போது தனது மகனைக் காப்பாற்ற 1,400 கிமீ தூரம் தனது ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற தெலுங்கானாவைச் சேர்ந்த ஒற்றைத் தாய், இப்போது உக்ரைனில் இருந்து திரும்புவதற்காகக் காத்திருக்கிறார். 2020 ஆம் ஆண்டு தேசிய அளவில் லாக்டவுனின் போது தனது மகனைக் காப்பாற்றுவதற்காக ரசியா பேகம் தனது இரு சக்கர வாகனத்தில் 1400 கிமீ தூரம் பயணித்தார். இதுவே அன்றைய சமூக வலைத்தளங்களில் மக்களை மிகவும் அறியப்பட்ட ஒரு நபராக இவர் மாறினார்.


இப்போது அவர் உக்ரைனில் இருந்து அவர் தனது மகன் திரும்புவதற்காக காத்திருக்கிறார். ரஸியா பேகத்தின் 21 வயது மகன் முகமது நிஜாமுதீன் அமான், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் தற்போது சிக்கிக் கொண்டுள்ளார். அவர் சுமி ஸ்டேட் யுனிவர்சிட்டியில் முதல் ஆண்டு MBBS மாணவர் ஆவார். மேலும் நூற்றுக் கணக்கான இந்திய மாணவர்களுடன், அவர் இன்னும் வெளியேற்றப் படவில்லை அமான். சுமார் 800 பேருடன், பலத்த குண்டுவெடிப்புக்கு மத்தியில் ஒரு அடித்தளத்தில் தஞ்சம் புகுந்தார்.


தெலுங்கானாவில் உள்ள நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 52 வயதான அரசு ஆசிரியை ரசியா இப்போது தனது மகன் பாதுகாப்பாக திரும்ப வேண்டி பிரார்த்தனை செய்து வருகிறார். வீடியோ அழைப்புகள் மூலம் அமனுடன் தொடர்பில் இருந்த அவர், சுமியிடம் இருந்து மாணவர்களை மீட்பதற்கு முன்னுரிமை அளிக்குமாறு மாநில மற்றும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Input & Image courtesy: India Today

Next Story
கதிர் தொகுப்பு
Trending News