கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்ற பெண்- மலப்புரத்தில் பதற்றம்.!
கோவிலுக்குள் செருப்பு அணிந்து சென்ற பெண்- மலப்புரத்தில் பதற்றம்.!
By : Shiva V
மலப்புரம் மாவட்டம் வன்னியம்பலம் அருகே உள்ள கோயிலுக்குள் ஹிஜாப் அணிந்து செருப்புக் காலுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட பெண் மீது கேரளாவின் வண்டூர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோயிலுக்குள் காலணிகள் அணிந்த இந்த பெண்ணின் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து ஸ்ரீ திரிபுரசுந்தரி தேவி கோயிலின் செயலாளர் சரத்குமார் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அவர் தனது புகாரில் குற்றம் சாட்டப்பட்ட பெண் வேண்டுமென்றே அப்பகுதியில் மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அடையாளம் தெரியாத அப்பெண் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக நடந்து கொண்டுள்ளார் என்றும் இந்திய தண்டனைச் சட்டம் 153, 153ஏ மற்றும் 295ஏ ஆகியவற்றின் கீழ் அந்தப் பெண்ணின் செயல் தண்டனைக்குரியது என்றும் அவர் கூறியுள்ளார். கேரளாவில் முஸ்லீம் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் மாவட்டமான மலப்புரம் கேரளாவில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் மையமாக இருந்து வருகிறது.
வளைகுடா நாடுகளில் இருந்து வரும் நிதியில் செயல்படும் பல மத மாற்ற மையங்கள் இந்த மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு தான் இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு முஸ்லீம் லீக் செல்வாக்கு மிக்க அமைப்பாக இருப்பதால் அடகப்படைவாதமும் தீவிரவாதத்துக்கான ஆதரவும் பெருகி இருப்பதாக கூறப்படுகிறது.
‘மாப்பிளா கலவரம்’ என்று அழைக்கப்படும் இந்துக்ளைக் குறிவைத்த கொடூர கலவரங்கள் மலப்புரம் மாவட்டத்தில் தான் நிகழ்ந்தது. இஸ்லாமிய கோட்பாட்டின் படி சிலை வழிபாடு ஒரு பாவம் என்ற நிலையில் இடைக்காலத்தில், முஸ்லிம் ஆட்சியாளர்கள் தங்களுக்கு குரானில் இருக்கும் நம்பிக்கையைக் காட்ட கோவில்கள் அழிக்கப்பட்டன.
இங்கே படத்தில் இருக்கும் பெண்ணும் அதே எண்ணங்களுடன் தான் சிலைகள் மற்றும் சிலைகளை வழிபடுபவர்கள் மீதான தனது வெறுப்பைக் வெளிப்படுத்தும் விதமாக இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் என்று செயலாளர் சரத் குமார் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
Source: https://www.organiser.org/Encyc/2020/12/12/Hijab-clad-girl-intrudes-into-a-temple-in-Kerala-complaint-lodged-by-the-temple-committee-for-violating-sanctity.html