Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய இறையாண்மை குறித்து பதிவிட்ட 78 யூட்யூப் சேனல்கள் முடக்கம் - மத்திய அரசின் அதிரடி

யூட்யூபில் 78 செய்தி சேனல்களை முடக்கி மத்திய அரசு அதிரடி காட்டி உள்ளது.

இந்திய இறையாண்மை குறித்து பதிவிட்ட 78 யூட்யூப் சேனல்கள் முடக்கம் - மத்திய அரசின் அதிரடி

Mohan RajBy : Mohan Raj

  |  20 July 2022 1:19 PM GMT

யூட்யூபில் 78 செய்தி சேனல்களை முடக்கி மத்திய அரசு அதிரடி காட்டி உள்ளது.

நேற்று பாராளுமன்றத்தில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராதாக்கூர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் ஒன்றில் 78 செய்தி சேனல்கள் யூட்யூபில் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, 'யூட்யூபில் இல் செயல்படும் 78 செய்தி சேனல் மற்றும் 560 யூட்யூப் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எந்த ஒரு உள் அடக்கத்தையும் தடை செய்ய சட்டப்பிரிவு தகவல் தொழில்நுட்பம் 2000 மத்திய அரசு அனுமதி உள்ளது' எனவும் தெரிவித்தார்.



Source - Maalai malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News