Kathir News
Begin typing your search above and press return to search.

அனாதையாக கைவிடப்பட்ட நாய்க்கு ஆதரவுக்கரம் கொடுத்த பாசக்கார மனிதர்.!

அனாதையாக கைவிடப்பட்ட நாய்க்கு ஆதரவுக்கரம் கொடுத்த பாசக்கார மனிதர்.!

அனாதையாக கைவிடப்பட்ட நாய்க்கு ஆதரவுக்கரம் கொடுத்த பாசக்கார மனிதர்.!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  9 Nov 2020 3:35 PM GMT

காசி என்ற பெயரைக் கொண்ட ட்விட்டர் பயனாளர்(@akaasi) ஒருவர், தான் ஒரு அமைப்பில் இருந்து எடுத்து வளர்த்த நாயை பற்றி ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த நாய்க்கு வீரா என்ற பெயரையும் அவர் சூட்டியுள்ளார். அனாதையாக விடப்பட்ட வீரா என்ற நாய் குட்டிக்கு இவர் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். குறிப்பாக இந்த நோய்தொற்று காலத்தில் அனைவரும் வீட்டில் இருக்கும் சூழ்நிலையில் செல்லப்பிராணிகளை வளர்க்கும் அனைவரும் தங்களுடைய செல்லப்பிராணிகளின் மீது அன்பும் அக்கறையும் பெருகி உள்ளது என்று சொல்லும் அளவிற்கு அதனுடன் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.

அந்த வகையில் காசி(@akaasi) என்ற ஒருவர் தன்னுடைய தெருவில் அனாதையாக விடப்பட்ட ஒரு நாய்க்கு உதவிக்கரம் நீட்டி உள்ளார். அதுவும் இந்த வீரா நாய்க்குட்டியை அவர் அனாதையாக எடுக்கும் பொழுது அதனுடைய பின்னங்கால்கள் பாதங்களை இரு கால்களையும் நறுக்கிவிட்டு அந்த நாயை அனாதையாக்கி விட்டிருக்கிறார்கள். இதன் காரணமாக அந்த நாய் குட்டி நடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டது.

அதற்கு உதவி செய்ய வேண்டும் என்ற முயற்சியில் காசி(@akaasi) களமிறங்கியுள்ளார். அதன் காரணமாக இந்த நாய் குட்டிக்கு மீண்டும் மறுவாழ்வு கிடைத்தது என்று சொல்லலாம். அந்த நாய்க்குட்டிக்கு முன்னங் காலில் அடிபட்டு இருப்பதால் அதனால் ஓடியாட முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டது. இதனால் அந்த நாய் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டதாம். இதற்கு தீர்வு காணும் வகையில் காசி என்பவர் அந்த நாயின் காலில் ஒரு செயற்கை கருவி பொருத்த வேண்டும் என்று எண்ணி உள்ளார். ஆனால் இதற்கு அதிக பணம் செலவாகும் என்ற காரணத்தினால், இரண்டு சக்கரங்களை வாங்கி, பின்னர் அதில் தன்னுடைய யுக்தியை பயன்படுத்தி ஒரு நடக்கும் சக்கரத்தை உருவாக்கியிருக்கிறார். அதை அந்த நாய் குட்டிக்கு மாட்டி அதை நடப்பதையும் ரசித்து பார்த்து இருக்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News