Kathir News
Begin typing your search above and press return to search.

போர் நடந்து 10 நாட்களுக்கு பிறகு மீட்பு விமானத்தை அனுப்பும் சீனா - இதுவரை ஆயிரக்கணக்கான குடிமக்களை மீட்டு உலகிற்கே முன்மாதிரியான இந்தியா!

போர் நடந்து 10 நாட்களுக்கு பிறகு மீட்பு விமானத்தை அனுப்பும் சீனா - இதுவரை ஆயிரக்கணக்கான குடிமக்களை மீட்டு உலகிற்கே முன்மாதிரியான இந்தியா!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 March 2022 1:27 PM GMT

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் சீன மக்களை ஏற்றிக்கொண்டு முதல் விமானம் தாயகம் திரும்பியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீன ஊடகமான சிஜிடிஎன், சனிக்கிழமை காலை சிறப்பு விமானம் ஒன்றில் சீனர்களின் முதல் குழு ஹாங்சோவுக்கு வந்தடைந்ததாக தெரிவித்துள்ளது.

உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு வெளியேற்றப்பட்ட 3,000க்கும் மேற்பட்ட சீன மக்கள் தாய் நாடு திரும்ப முதல் முறையாக தற்போது தான் விமானம் அனுப்பப்பட்டுள்ளது.

301 பேரை ஏற்றிச் செல்லும் ஏர்பஸ் ஏ330-300 விமானத்தில் சீன குடிமக்கள் வெளியேற்றப்படுவார்கள் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆபரேஷன் கங்கா மூலம் மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இந்தியர்களை இந்தியா ஏற்கனவே தாயகம் அழைத்து வரும் பணியை தொடங்கிவிட்டது.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆபரேஷன் கங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று 14 விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டன. உக்ரைனில் இருந்து மூன்று விமானப்படை விமானங்கள் மூலம் சுமார் 630 பேர் நாட்டை வந்தடைந்தனர்.

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் கங்கா திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. மார்ச் 10ஆம் தேதிக்குள் 80 விமானங்கள் மீட்புப் பணிக்கு அனுப்பப்படும். மேலும் விமானப்படை விமானங்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அடுத்த 24 மணி நேரத்தில் 11 பயணிகள் விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபடும். நான்கு விமானப்படை விமானங்களும் களமிறங்கியுள்ளன.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News