Kathir News
Begin typing your search above and press return to search.

திராவிட மாடலுக்கு இந்து முன்னணி கொடுத்த பதிலடி!

திராவிட மாடலின் கேள்விக்குரிய பேனருக்கு தற்போது இந்து முன்னணி கட்சியின் சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.

திராவிட மாடலுக்கு இந்து முன்னணி கொடுத்த பதிலடி!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 Aug 2022 1:14 AM GMT

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரி தற்போது பல்வேறு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக பொருட்களை வாங்கும் நுகர்வோருக்கு தான் எவ்வளவு பொருட்களுக்கு வரியை அரசாங்கத்திற்கு செலுத்துகிறோம்? என்பது தற்போது வெளிப்படையாக தெரிகிறது என்றால் அதற்கு GST தான் முக்கிய காரணமாக இருக்கிறது. GSTக்கு முன்பு வரை பல்வேறு மக்கள் வரிப்பணத்தை விற்போர் இடமே கொடுத்திருக்கிறார்கள். இதன் காரணமாக பல்வேறு விதமான குளறுபடிகள் நடந்துள்ளது மக்கள் பணத்திற்கு சரியாக வரி கட்டாதது, பல்வேறு நபர்கள் திடீரென்று பணக்காரர்கள் ஆவது போன்ற செயல்கள் நடைபெற்றுள்ளது.


இந்த GST வைத்து தற்போது திராவிட மாடல் எனப்படும் தி.மு.க கட்சியை சேர்ந்த நபர்கள் பேனர்கள் வைத்து பல்வேறு தகாத வார்த்தைகளை பயன்படுத்தி மத்திய அரசாங்கத்தை கடுமையாக தாக்கியுள்ளது. குறிப்பாக தற்போது கூட வீடுகளில் அனைவரும் தேசியக் கொடியை ஏற்றி தங்களுடைய நாட்டுப்பற்றை தெரிவிக்குமாறு மத்திய அரசாங்கம் கூறுகிறது. இந்த ஒரு நிகழ்வையும் கடுமையாக சாடியுள்ளார் தி.மு.கவை சேர்ந்த நபர்கள், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது இந்து முன்னணி கட்சியின் சார்பில் பதில் ஒன்றையும் அளித்துள்ளது.


வீரசாகர்களை இழிவுபடுத்தும் தி.மு.க. இந்த செயல் மிகவும் கண்டனத்துக்குரிய தற்போது பார்க்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்து முன்னணி கட்சியின் சார்பில், சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அறிவித்து கருப்புக் கொடி காட்டிய ஈ.வே.ரா தேச பக்தனா? உலகப் பொதுமறையாம் திருக்குறளை தங்கத் தட்டில் வைத்த மலம் என்று கூறிய ஈ.வே.ரா தமிழர் தலைவனா? வளர்த்த மகளையே திருமணம் செய்து கொண்ட ஈ.வே.ரா தமிழ் சமுதாயத்திற்கு சிறந்த தலைவரா? என்று கூறி தன்னுடைய பதிலை தெரிவித்துள்ளது இந்து முன்னணி.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News