Kathir News
Begin typing your search above and press return to search.

ப்ளே ஸ்டோரில் இருந்து திடீரென தடை செய்யப்பட்ட செயலி - காரணம் இதுதான்.!

ப்ளே ஸ்டோரில் இருந்து திடீரென தடை செய்யப்பட்ட செயலி - காரணம் இதுதான்.!

ப்ளே ஸ்டோரில் இருந்து திடீரென தடை செய்யப்பட்ட செயலி - காரணம் இதுதான்.!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 Nov 2020 10:02 PM IST

ஆன்ட்ராய்டு பயன்படுத்துபவர்களுக்கு கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து 100 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட Android சாதனங்களுக்கான பிரபலமான செய்தியிடல் பயன்பாடான 'Go SMS Pro' இப்போது நீக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியானது அதன் பயன்படுத்துவோருகளால் தனிப்பட்ட முறையில் அனுப்பப்படும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற செய்திகளை யார் வேண்டுமானாலும் பார்க்க அனுமதிக்கும் வகையில் சில பாதுகாப்பு குறைபாடுகளை கொண்டிருப்பதாக தெரியவந்தது. இந்தச் சிக்கல்கள் குறித்த தகவல்கள் வெளியான சில மணி நேரங்களில் இந்தச் செயலி பிளேஸ்டோரிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டது.

இந்த குறைபாடு குறித்து Go SMS Pro டெவலப்பர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திலேயே தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், சீனாவை தளமாகக் கொண்ட நிறுவனம் பதிலளிக்கவில்லை மற்றும் பிரச்சினை சரி செய்யப்பட்டதா? என்பதை உறுதிப்படுத்தவில்லை. இந்த செயலியை அகற்றுவதற்கு முன்பு Google Play இலிருந்து 100 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்கள் இருந்தன. சிக்கல் குறித்த அறிக்கை வெளிவந்த பிறகு, கூகிள் தானாகவே நடவடிக்கை எடுக்க முடிவு செய்து, இந்த செயலியை பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியது.

இந்தச் செயலி, தனிப்பட்ட புகைப்படங்கள், நிதி பரிவர்த்தனை விவரங்கள், செய்திகள், SMS என அனைத்தையும் இணையத்தில் கசியவிட்டதாக தகவல்கள் வெளியாகின. மில்லியன் கணக்கான Go SMS Pro பயனர்களின் விவரங்கள் அனைத்தும் சுலபமாக இணையத்தில் கிடைக்கிறது.

சிங்கப்பூர் சைபர்-பாதுகாப்பு நிறுவனமான டிரஸ்ட்வேவ் (Trustwave) நிறுவனத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் Go SMS Proவில் உள்ள இந்த குறைபாட்டைக் கண்டுபிடித்தனர். டிரஸ்ட்வேவ் ஆராய்ச்சியாளர்கள் இந்த சிக்கலை குறிப்பாக Go SMS Pro பதிப்பு 7.91 இல் கண்டறிந்தனர். இருப்பினும் ஒரு வலைதள பதிவில் இந்த குறைபாடு இன்னும் நடைமுறையில் இருப்பதாக தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து தான், Google பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்குவதற்கு Go SMS Pro செயலி நீக்கப்பட்டது. இருப்பினும், முன்பே நிறுவப்பட்டிருக்கும் கோடி கணக்கான சாதனங்களில் இது இன்னும் இருக்கலாம் என்பதால் மக்களும் பாதுகாப்பு சிக்கலைத் தவிர்த்திட விழிப்புடன் அதை தங்கள் போன்களில் இருந்து அகற்றிவிட வேண்டும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News