திருப்பூர் பள்ளியில் மதம் மாற வலியுறுத்தி ஆசிரியை வற்புறுத்தல் - பெற்றோரோடு காவல்நிலையம் சென்ற மாணவி
By : Kathir Webdesk
திருப்பூர் மாநகராட்சி பள்ளியில், மாணவியரை மத மாற்றம் செய்ய முயன்ற ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
திருப்பூர், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி தமிழாசிரியை ஒருவர், ஆறாம் வகுப்பு படிக்கும் எங்கள் மகள் மற்றும் மாணவியரை மத மாற்றம் செய்ய முயல்கிறார். நெற்றியில் திருநீறும், கழுத்தில் ருத்ராட்சை கோர்த்த கயிறும் அணிந்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆசிரியை, ஹிந்து கடவுள்கள் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசுகிறார். மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
வகுப்பு பிரார்த்தனையை கிறிஸ்துவ முறைப்படி செய்ய வற்புறுத்தியுள்ளார். இதை ஏற்று கொள்ளாத எங்கள் மகளை கடுமையாக திட்டியுள்ளார். சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
மத மாற்றத்துக்கு முயன்ற ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாணவியருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஹிந்து முன்னணி மாநில செயலர் செந்தில்குமார் கேட்டுக்கொண்டார்.