அபராத தொகை 1,000, கையில் கேட்டது 2,300: நியாயம் கேட்டவரை எட்டி உதைத்த போக்குவரத்து காவலர்!
போக்குவரத்து காவலர் கொடுத்த ரசீது தொகை ஒன்று ஆனால் அவர்கள் கேட்டது வேறொரு தொகை.
By : Bharathi Latha
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்து இருக்கும் வீரப்ப நாயக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தான் வேடியப்பன் என்பவர். இவர் நேற்று தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்து எஸ்.பி அவர்களிடம் புகார் ஒன்று கொடுத்து இருக்கிறார். குறிப்பாக அவர் கூறியுள்ள அந்த மனுவில், நான் நேற்று முன்தினம் அரூர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் எனது மகளை அழைத்து வருவதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்ற இருந்தேன். அரூர் மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் நின்றிருந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர் எனது வாகனத்தை நிறுத்தி ஹெல்மெட் அணிய மறந்ததற்கு அபராதம் விதித்தார். ஹெல்மெட் அணியாததற்கு ரூ. 2,300 பணம் கொடு என்று கேட்டனர்.
ஆனால் அவரிடம் கையில் அவ்வளவு பணம் இல்லை இது ஒரு காரணத்தினால் ஆன்லைன் மூலமாக அபராத தொகையை கட்ட வேண்டும் என்று ரசீது கொடுத்தார். அதில் ரூபாய் ஆயிரம் மட்டும் தான் குறிப்பிட்டு இருந்தது. ஆனால் என்னிடம் அவர் 2300 கேட்டிருந்தார், ஆனால் ரசீதில் ஆயிரம் ரூபாய் மட்டும் கேட்டதற்கு பதில் கேட்டேன். அதற்கு என்னை தர குறைவாக பேசி தரையில் என்னை இழுத்துச் சென்று தாக்கினார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னை பூட்ஸ் காலால் எட்டி உதைத்து நியாயத்தை கேட்டதற்கு உண்மையை கூறாமல் மறுத்தார். என்னை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று எனது சாதி பெயரை சொல்லி கேவலமாக பேசியதோடு சரமாரியாக தாக்கினார்கள். எனவே அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த மனுவில் அவர் கேட்டுக் கொண்டார்.
Input & Image courtesy:Maalaimalar