பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை விற்பனை செய்த டிவிட்டர்: 150 மில்லியன் அபராதம்!
யூசர்களின் தனிப்பட்ட தகவல்களை விட்டார் நிறுவனம் விற்பனை செய்த காரணத்திற்காக சுமார் 150 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.
By : Bharathi Latha
உலகில் உள்ள அனைவருமே தற்போது இணையதளம் வழியாக பல்வேறு சேவைகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் மூலம் தங்களுடைய பொன்னான நேரத்தை சில செலவு செய்பவர்களும் உள்ளார்கள். குறிப்பாக பெரும்பாலான மக்கள் உலக அளவில் உள்ள சிறந்த தலைவர்கள் கூட தங்களுடைய தகவல்களை ட்விட்டர் மூலம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார்கள். எந்தவொரு சமூக வலைத்தளங்களும் எப்படி தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது? என்பது குறித்து பிரைவேட் டேட்டா ஸ்டோரேஜ் வசதிகளை செய்து கொடுத்துள்ளது. ஆனால் தற்போது ட்விட்டர் நிறுவனம் தன்னுடைய பயனாளர்களின் சொந்த தகவல்களை திரட்டி வருவதாக கூறப்படுகிறது.
பயனாளர்களின் இந்தத் தனிப்பட்ட தகவல்களை மற்ற நிறுவனம் மூலம் விற்பனை செய்வதாகவும் தற்போது சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. இத்தகைய ஒரு காரணத்திற்காக ட்விட்டருக்கு 150 மில்லியன் டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனம் தனது பயனாளர்களின் மேற்கொண்டுள்ள விதிமுறைகளை மீறியுள்ளது என்று ஃபெடரல் டிரேட் கமிஷன் மற்றும் டிபார்ட்மெண்ட் ஆஃப் ஜஸ்டிஸ் இரண்டுமே ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. பயனாளர்களிடம் கணக்கு தொடங்கும் முன்பு பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை எந்த ஒரு விளம்பர நிறுவனங்களுக்கு பகிர மாற்றம் என்று தன்னுடைய ஒப்பந்தத்தில் ஏற்கனவே டுவிட்டர் நிறுவனம் கூறியிருந்தது அதை தற்போது மீறி உள்ளதாக தெரியவருகிறது.
இந்த ஒப்பந்தத்தின்படி இந்த விதிமுறைகளை நிறுவனம் 2022ஆம் ஆண்டு மீறி உள்ளதாகவும் தகவல்கள் ஏதேனும் வெளியிட்டுள்ளது சம்பந்தப்பட்ட நிறுவனம். உலக நாடுகளில் இருக்கும் பல்வேறு மக்களின் தனிப்பட்ட விபரங்களும் இதில் திருடு போயிருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா யூரோப் போன்ற நாடுகளைச் சேர்ந்த மக்களின் தனிப்பட்ட விபரங்களும் பகிரப்பட்ட உள்ளதாக தெரியவருகிறது.
Input & Image courtesy: News 18