Kathir News
Begin typing your search above and press return to search.

ட்விட்டரில் ப்ளூ டிக் வசதியை பயன்படுத்த கட்டணமா?

ட்விட்டர் பயனாளிகள் இனி ப்ளூ டிக் கணக்கு வைத்திருக்கும் பொழுது மாதம் தோறும் 4.99 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக செலுத்த வேண்டும்.

ட்விட்டரில் ப்ளூ டிக் வசதியை பயன்படுத்த கட்டணமா?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 Nov 2022 2:57 AM GMT

சமூக வலைதளங்களில் அதிகமாக மக்கள் பயன்படுத்தும் வகையில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற பல்வேறு வலைதளங்கள் இருந்து வருகிறது. இருந்தாலும் twitter பயன்படுத்தும் பயனாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காரணம் இங்கு பல்வேறு விவாத மேடைகளும் நடைபெறுகிறது. குறிப்பாக அரசியல் மற்றும் காரசார பயிற்சிகள் அனைத்தும் ட்விட்டரில் தான் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். உலகமெங்கும் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய பல்வேறு நிகழ்வுகளையும் ட்விட்டரில் பதிவிடுவது வழக்கம்.


அந்த வகையில் ட்விட்டரின் அதிகாரப்பூர்வமான அங்கீகரிக்கப்பட்ட கணக்கை பெறுவதற்கு ப்ளூ டிக் மார்க் என்பதை பெற வேண்டும். இதனை பெறுவதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன இருந்தாலும், இதற்கு முன்பு வரை கட்டணம் கிடையாது. ஆனால் இனிமேல் இதற்கு கட்டணம் செலுத்தி மாதம் தோறும் இதனை புதுப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது. தற்பொழுது twitter நிறுவனம் உலகின் பெரும் பணக்காரரான எலன் மஸ்கிடம் கை மாறி உள்ள நிலையில், அவர் ட்விட்டர் வலைதளத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்து இருக்கிறார்.


அதன் ஒரு பகுதியாக ட்விட்டரில் ப்ளூ டிக் வசதிக்கு இனி கட்டணம் வசூலிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ட்விட்டரில் பிரபலங்கள் பெரிய நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமான கணக்குகளுக்கு ப்ளூ டிக் வழங்கப்படுகிறது. இனி இந்த புளூ டிக் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதம் தோறும் 4.99 அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 411 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் கட்டணம் செலுத்த முடியவில்லை என்றால் ப்ளூடிக் வசதி உள்ள உள்ளவர்களின் கணக்கிலிருந்து ப்ளூடிக் நீக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தன்னுடைய செலவீனத்தை குறைக்க ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் பல்வேறு வேலைகளை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News