உக்ரைன் மீது போர்: பரபரப்புகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் பிரதமரின் ரஷ்ய பயணம்!
உக்ரைன் மீதான ரஷ்ய போரின் போதும், பாகிஸ்தான் பிரதமரின் பயணத்தின பின்னணி என்னவாக இருக்கும்?
By : Bharathi Latha
உக்ரைன் மீது ரஷ்யா தற்பொழுது போரை நடத்தி வருகிறது. இத்தகைய ஒரு பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியிலும் கூட பாகிஸ்தானின் பிரதமர் ரஷ்யாவிற்கு சென்றுள்ளார் என்ற செய்தி தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் கூட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ரஷ்யா பயணம் பல்வேறு நாடுகளையும் உற்றுநோக்க வைத்துள்ளதாம். உக்ரைனில் ரஷ்ய இராணுவ நடவடிக்கைக்கு மத்தியிலும், இம்ரான் கான்- விளாடிமிர் புடின் சந்திப்பு திட்டமிட்டபடி நடைபெற உள்ளது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் பிரதமர் பயணத்தின் போது, இம்ரான் கான், ரஷ்ய நிறுவனங்களுடன் இணைந்து நீண்டகால தாமதமான, பல பில்லியன் டாலர் எரிவாயுக் குழாய் அமைப்பதற்கு அழுத்தம் கொடுப்பதை பயணத்தில் நோக்கமாகக் கொண்டுளளார் என்று பாகிஸ்தான் தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு பாகிஸ்தான் செய்தித்தாள் படி, "ரஷ்யா பிரதமரின் டினின் வருகை கடந்த இரண்டு ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டது, ஆனால் கோவிட்-19 தொற்றுநோய் உட்பட பல்வேறு காரணிகளால் செயல்படுத்த முடியவில்லை. ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களை உக்ரைன் தாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை திட்டமிட்டபடி சந்திப்பார் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. உக்ரைன்-ரஷ்யா எல்லையில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில், பிரதமர் இம்ரான் கான் புதன்கிழமை தாமதமாக மாஸ்கோ வந்தடைந்தார்.
இந்த பயணத்தில் போது கானை, ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் சந்திக்கவுள்ளார். பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை மூலம் விவாதித்து இருக்கிறார்கள். வியாழன் இன்று உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்ததைத் தொடர்ந்து, உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்யப் படைகள் ஏவுகணைகளை வீசியதாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பெரிய போராட்டங்களுக்கு மத்தியில்தான் உக்ரைன் இருக்கிறது.
Input & Image courtesy: Wionews