Kathir News
Begin typing your search above and press return to search.

போகும் வழியில் ஓட்டுநருக்கு ஏற்பட்ட பாதிப்பு: உதவிய துணிச்சல் பெண்ணின் வீடியோ!

போகும் வழியில் ஓட்டுனருக்கு ஏற்பட்ட வலிப்பு நோய், விரைவில் உதவிய துணிச்சல் பெண்ணின் வீடியோ.

போகும் வழியில் ஓட்டுநருக்கு ஏற்பட்ட பாதிப்பு: உதவிய துணிச்சல் பெண்ணின் வீடியோ!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 Jan 2022 1:39 PM GMT

இன்றைய கட்டங்களில் அனைவருக்கும் இருக்கக்கூடிய மிகவும் சாதாரணமான ஒரு நோயாகத்தான் வலிப்பு நோய் பார்க்கப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட ஒருவர் எந்த நேரத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த நோய் எந்த இடத்தில், எந்த நேரத்தில் தாக்கும் என்று யாருக்கும் தெரியாது. அந்த வகையில் தற்பொழுது மகாராஷ்டிராவை சேர்ந்த ஓட்டுநர் ஒருவருக்கு தன் பேருந்தை இயக்கி கொண்டிருக்கும் சமயத்தில் இந்த நோய் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள பூனேவில் தான் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.


சுற்றுலா நேரத்திற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்கிய இந்தப் பேருந்தை வலிப்பு நோய் உள்ள ஓட்டுநர் ஓட்டி சென்றுள்ளார். போகும் வழியில் அவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதைத் தொடர்ந்து பயணிக்கும் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இருந்தாலும் அந்த பேருந்தில் உள்ள ஒரு துணிச்சலான பெண்மணி அவரை மற்றும் பயணிகள் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக தக்க சமயத்தில் பேருந்தை இயக்கி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


40 வயதான அந்தப்பெண்ணின் பெயர் யோகிதா. இவர் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியவுடன் 10 கிலோ மீட்டர் வரை பேருந்தை மேலும் இயக்கியுள்ளார். அவருடைய இந்த துணிச்சலான சாதனை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து தற்போது பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. சரியான நேரத்தில் உங்கள் செய்யும் சிறிய விஷயங்கள் கூட பல உயிர்களை காப்பாற்ற உதவுகிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Input & Image courtesy:News18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News