தேசிய கொடியில் அசோக சக்கரத்திற்கு பதில் மெக்கா மசூதி படம் - மொஹரம் பண்டிகை அன்று அவமதித்த இஸ்லாமிய கும்பல்!
By : Kathir Webdesk
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இஸ்லாமியர்கள் முஹர்ரம் ஊர்வலத்தில் அசோக் சக்கரத்திற்கு பதிலாக இஸ்லாமிய சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடியை வைத்திருக்கும் வீடியோ சமூக ஊடக தளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் கான்பூர் போலீசில் புகார் அளித்துள்ளன.
இணையத்தில் வைரலாகி வரும் 33 வினாடிகள் கொண்ட வீடியோவில், இஸ்லாமிய சின்னங்களால் சிதைக்கப்பட்ட மூவர்ணக் கொடியை சில முஸ்லிம் இளைஞர்கள் பிடித்துள்ளனர். கொடியின் மையத்தில் அசோக் சக்கரம் இல்லை, மேலும் அதில் இஸ்லாமிய சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
கான்பூர் காவல்துறை ஆணையர் பிபி ஜோக்தந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசியக் கொடியை அவமதித்தது தொடர்பாக விஎச்பியிடம் இருந்து எங்களுக்கு புகார் வந்துள்ளது. விசாரணை நடந்து வருகிறது, குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்" என்றார்.