அமெரிக்க உணவு விடுதி: நம்முடைய தோசை பெயரை மாற்றிய, அதிக விலைக்கு விற்பனை!
இந்திய உணவுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற தோசை, வடை பெயர்களை மாற்றி அதிக விலைக்கு விற்பனை செய்யும் அமெரிக்க உணவு விடுதி.
By : Bharathi Latha
அமெரிக்காவில் தற்போது ஒரு உணவு விடுதியில் தோசைக்கு இன்னொரு பெயரைச் சூட்டி உள்ளார்கள். அது நேக்கட் கிரீப் என்றழைத்து அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளார்கள். மேலும் இதனை இணையதளத்தின் மூலம் அறிந்து கொண்ட பல்வேறு நெட்டிசன்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏனெனில் இந்தியாவில் சாதாரண மக்கள் கூட சாப்பிடும் தோசை மற்றும் வடைகளின் விலை அமெரிக்காவில் அதிக விலைக்கு விற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல், தங்கள் அடையாளமாக விளங்கும் உணவு வகைகளின் பெயர்களை மாற்றியது மிகவும் வருந்தத்தக்கது என்று கூறியுள்ளார்கள்.
மேலும் மெனு கார்டில் இத்தகைய விலைகள் அதிகமாக இருப்பது தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி ஒன்றாக இருந்து வருகிறது. ஏன் இந்த பெயரை மாற்றுகிறீர்கள்? என்று நெட்டிசன்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றாக இடம் பெறுகின்றது. தமிழகத்திற்கு வரும் பல்வேறு பிரபலங்கள் குறிப்பாக வட இந்திய பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் நம்முடைய தோசையை சுவைத்து அருமையாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்து உள்ளார்கள்.
உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதியில் பல்வேறு இந்திய உணவகங்கள் தோசை, இட்லி, வடை போன்ற உணவுகளை தயாரித்து விற்பனை செய்வது பொதுவான ஒன்றாகும். ஆனால் அவற்றின் பெயர்களை தற்போது வேறுவிதமாக மாற்றி அதிகமாக வைத்திருக்கும் ஹோட்டலின் மெனு கார்டு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு தோசை 1,318 ரூபாய், அமெரிக்காவின் சியாட்டிலை சேர்ந்த இந்தியன் க்ரீப் கோ என்ற உணவு விடுதி தனது மெனு கார்டில், நம்ம ஊர் சாம்பார் வடைக்கு வைத்திருக்கும் பெயர் தான், 'டங்க்ட் டோனட் டிலைட்' . பெயர் மட்டும் அல்ல அதன் விலையை கேட்டாலும் நமக்கு தலைசுற்றும். அமெரிக்க டாலர் மதிப்பில் 16.49 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.1,318.83-ஆகும்.
Input & Image courtesy: Oneindia News