அலிகாரில் உடைக்கப்பட்ட இந்துக் கோயில் - குற்றவாளி ஆசாத் சம்பவ இடத்திலேயே கைது!
By : Muruganandham
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அலிகார் மாவட்டத்தில் உள்ள இந்து கோவிலில் சிலைகளை சேதப்படுத்தியதற்காக முகமது ஆசாத் என்ற 25 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர் .
ஆகஸ்ட் 28 மற்றும் ஆகஸ்ட் 29 ஆகிய தேதிகளின் இடைப்பட்ட இரவில் இந்த சம்பவம் நடந்தது. தகவல்களின்படி, தானா பன்னாதேவியின் ரசால்கஞ்ச் புறக்காவல் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள பழமையான சிவன் கோவிலில் ஆசாத் நள்ளிரவில் நுழைந்தார். அவர் ஒரு சுத்தியலால் 6 டஜன் சிலைகளை சேதப்படுத்தினார்.
சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . பாரதிய ஜனதா கட்சி தலைவரும், முன்னாள் மேயருமான சகுந்தலா பாரதி போலீசாருடன் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆசாத் கைது செய்யப்பட்டு இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 452,427, 307, மற்றும் 295 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அறிக்கைகளின்படி, கோவிலில் ஒரு சிலை காணவில்லை, இந்த சம்பவத்தில் மேலும் பலர் ஈடுபட்டிருக்கலாம் எனத்தெரிகிறது.