அரசியலுக்காக சினிமா ஆர்டிஸ்ட் எல்லாம் உள்ள வந்த என்ன நியாயம்? முதல்வர் ஸ்டாலின் அழைத்து பாராட்டிய சிறுவனுக்கு இப்படியொரு பின்னணி இருக்கா?
பிரபலமான சிறுவன் அப்துல் கலாம் இந்த படத்தில் நடித்துள்ளார்
By : Kathir Webdesk
சோஷியல் மீடியா மூலம் வைரலான சிறுவன் அப்துல்கலாமுக்கு, பிரதமரின் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வீடு வழங்கியுள்ளார்.
இணையத்தில் வைரலான சிறுவனின் பெயர் அப்துல் கலாம். சென்னை கண்ணகி நகரில் தாய் திவ்யா என்கிற தில்சத் பேகம் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தில்சத் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்.
கடந்த சில வாரங்களாக சிறுவன் ஒருவன் "யாரையும் வெறுக்க கூடாது, ஏன் வெறுக்கனும்" என்று மனித நேயம் குறித்து பேசி இருந்த வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரலானது.
சிறுவன் பேசியதை கேட்டு நேரில் சந்திக்க வேண்டும் என முதல்வர் மஸ்டாலின் அழைத்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின், சிறுவன் அப்துல் கலாம் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து பாராட்டி புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
அப்போது முதல்வரிடம் தங்களுக்கு வீடு வேண்டும் என்று அப்துல் கலாமின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். உடனடியாக பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்க அமைச்சர் அன்பரசனுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி சிறுவன் குடும்பத்துக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. சென்னை கேகே நகர் சிவலிங்கபுரம் பகுதியில் தமிழக அரசு வீடு வழங்கியுள்ளது. இந்த நிலையில் சிறுவன் அப்துல் காலம் படங்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ஹே சினாமிகா என்ற படத்தில் ஒரு காட்சியில் தோன்றியிருக்கிறார் என நடிகர் JSk gopi பதிவிட்டுள்ளார்.