FactCheck: பதைபதைக்க வைக்கும் சீனாவின் வெள்ள வீடியோ காட்சிகள் உண்மையா?
By : Saffron Mom
1000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவில் கனமழை பெய்து வருகிறது. இதன் பிறகு பேரழிவுகரமான வெள்ளம் தொடர்கிறது. உயிர் மற்றும் சொத்துக்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. பேரழிவின் பயங்கரமான காட்சிகள் புகைப்படங்கள், வீடியோக்கள் வாயிலாக சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக வலம் வருகின்றன. கனரக வாகனங்கள் வெள்ளநீரில் சறுக்குவதைக் காட்டும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது, இது சீன வெள்ளத்தின் காட்சிகள் என்று கூறப்படுகிறது.
வீடியோவில், ஒரு பக்கத்திலிருந்து வரும் வெள்ளம் அதனுடன் பல விமானங்களையும் வாகனங்களையும் கொண்டு வருகிறது. எந்த நேரத்திலும், முழு இடமும் வெள்ளநீரில் மூழ்கும் அபாயம் இருப்பது போல் தெரிகிறது? பகிரப்பட்ட வீடியோ மூலைகளில் சில வெளிநாட்டு எழுத்துக்களை காணலாம்.
ஆனால் உண்மையில் இவை சீனாவின் வெள்ளக் காட்சிகளா என ஆராய்ந்த போது, இந்த வீடியோ ஏற்கனவே 29 ஏப்ரல் 2011 அன்று வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) வெளியிட்டது என்பது தெரிகிறது.
11 மார்ச் 2011 அன்று வடக்கு ஜப்பான் முழுவதும் செண்டாய் விமான நிலையம் மற்றும் துறைமுக நகரங்களை சுனாமி தாக்கியது, ஒரு மாதத்திற்குப் பிறகு, ஜப்பானிய கடலோர காவல்படை முதலில் இந்த வீடியோவை வெளியிட்டது.
நேஷனல் ஜியோகிராஃபிக் படி, ஜப்பானில் 11 மார்ச் 2011 அன்று பதிவுசெய்யப்பட்ட வரலாற்றிலேயே மிகவும் வலுவான பூகம்பம் உண்டானது. இந்த நிலநடுக்கம் வட பசிபிக் பெருங்கடலுக்கு கீழே, செண்டாய்க்கு கிழக்கே ஏற்பட்ட சுனாமியால் உண்டானது.
ஆனால் தொடர்ச்சியான இயற்கை பேரழிவுகள் வாழ்க்கைக்கும் சொத்துக்கும் பெரும் அழிவை ஏற்படுத்தின. 450,000 க்கும் அதிகமானோர் வீடற்றவர்களாக மாறினர், மேலும் 15,500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
சீ வெள்ளம் 2021
மத்திய ஹெனான் மாகாணத்தில் 1,000 ஆண்டுகளில் அதிக மழை பெய்துள்ளது. அரசு ஊடகங்களின்படி, மொத்தம் 12,40,000 மில்லியன் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 1,60,000 பேர் வெளியேற்றப்பட்டனர். சுரங்கப்பாதைகள், வீதிகள், ஹோட்டல்கள் மற்றும் பல கட்டிடங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் நகரத்தின் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வைரலான பகிரப்பட்ட வீடியோ 2011ல் ஜப்பானின் பூகம்பம் மற்றும் சுனாமி என்று நாம் முடிவு செய்யலாம். இந்த வீடியோ தற்போதைய சீன வெள்ளத்தின் கிளிப்புகள் என தவறான செய்திகளுடன் பகிரப்பட்டுள்ளது.