Kathir News
Begin typing your search above and press return to search.

வாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் பாஸ்போர்ட் குறைதீர்க்கும் வசதி !

வாட்ஸ் அப்பில் வீடியோகால் மூலம் பாஸ்போர்ட் குறைதீர்ப்பு வசதி இந்தியாவில் அறிமுகமாகிறது.

வாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் பாஸ்போர்ட் குறைதீர்க்கும் வசதி !
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  7 Sep 2021 1:51 PM GMT

இந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகின்றனர். உலகின் எந்த மூலையில் என்ன நடந்தாலும் அது சமூக வலைதளங்கள் மூலமாக மக்களுக்கு சென்றடைகிறது. அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப்பில் மெசேஜிங், வீடியோ அழைப்பு வசதி, வாய்ஸ் மெசேஜ் வசதி, கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வது என அனைத்து தேவைக்கும் இது மிகவும் முக்கியமான மற்றும் தவிர்க்க முடியாத தகவல் தொடர்பு தலமாக மாறியுள்ளது. இந்த வாட்ஸ்அப்பில் புதிதாக வாட்ஸ்அப் குறைதீர்ப்பு சேவை துவங்கப்பட்டுள்ளது.


இதில் குறிப்பாக பாஸ்போர்ட் தொடர்பான குறைகளைத் தீர்ப்பதற்காக, செப்டம்பர் 7-ஆம் தேதி முதல், செவ்வாய்க்கிழமை தோறும் 12 மணி முதல் 1 மணி வரை வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பதாரர், பிராந்திய பாஸ்போர்ட் அலுவலர் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகத்தின் பிற உயரதிகாரிகளுடன், இணையதளம் மூலமாக வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பில் உரையாடி தமது குறைகளை தெரிவிக்கலாம். மேலும் இதற்காக தங்களது குறைகளை தெரிவிக்க விரும்பும் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் +917305330666 என்ற இந்த வாட்ஸ்-அப் எண்ணை தங்கள் போனில் சேமித்து இதற்காகப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே குறை தீர்க்கும் பொருட்டு டெலி கான்ஃபரன்ஸ், மின்னஞ்சல், ஸ்கைப் மெய்நிகர் விசாரணை, டுவிட்டர் ஆகியவற்றின் வாயிலாக பாஸ்போர்ட் தொடர்பான விண்ணப்பதாரரின் குறைகளை, சென்னை பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம் பெற்று, அவற்றை தீர்த்து வருகிறது. இப்போது அவற்றுடன் கூடுதலாக, வாஸ்ட்-அப் வீடியோ அழைப்பு வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல், சென்னை பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கும் பாஸ்போர்ட் சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருந்தால், வாட்ஸ்அப் வீடியோ அழைப்பு வாயிலாக உங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று பொதுமக்களுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

InputNewsFie

Image courtesy:newsfie


Next Story
கதிர் தொகுப்பு
Trending News