Kathir News
Begin typing your search above and press return to search.

பத்திரிகையாளர்கள் மீது ஜீ ஸ்கொயர் புகார் - பின்னணி என்ன?

கட்டுமான நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் ஜூனியர் விகடன் மற்றும் யூடியூபர் மாரிதாஸ், சவுக்கு சங்கர் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள விவகாரம் பத்திரிகையாளர் சங்கங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளர்கள் மீது ஜீ ஸ்கொயர் புகார் - பின்னணி என்ன?

Mohan RajBy : Mohan Raj

  |  23 May 2022 2:59 PM GMT

கட்டுமான நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் ஜூனியர் விகடன் மற்றும் யூடியூபர் மாரிதாஸ், சவுக்கு சங்கர் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள விவகாரம் பத்திரிகையாளர் சங்கங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜீ ஸ்கொயர் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் தி.மு.க மேலிடத்தில் தொடர்பு வைத்துக்கொண்டு மற்ற நிறுவனங்களை மிரட்டி வருவதாகவும் தி.மு.க'வின் முக்கிய பிரமுகர்கள் பெயரைப் பயன்படுத்தி சி.எம்.டி.ஏ'விடம் இருந்து கட்டிடம் மற்றும் இதர பணிகளுக்கு அனுமதி பெறுவதாகவும் ஜூனியர் விகடன், மாரிதாஸ், சவுக்கு சங்கர் ஆகியோர் சமூக ஊடகங்களில் செய்தி பரப்பியதாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் இது தொடர்பாக சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளது. இந்த புகாரில் கவின் என்பவர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராமஜெயம் என்கின்ற பாலா என்பவரை அலைபேசி வழியாக தொடர்பு கொண்டு 50 லட்ச ரூபாய் பணம் கொடுக்கவில்லை என்றால் ஜூனியர் விகடன் மற்றும் யூட்யூப் போன்ற மீடியாக்களில் ஜீ ஸ்கொயர் தவறான தகவல்களை வெளியிடுவேன் என மிரட்டியதாக புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 9ஆம் தேதி இன்னொரு நபர் ஒருவர் ஜி ஸ்கொயர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மிரட்டியதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் ஜூனியர் விகடன் நிறுவனத்தின் இயக்குனர்கள் பெயரும் மற்றும் மாரிதாஸ், சவுக்கு சங்கர் வாழ்க்கை பெயர்களும் குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜூனியர் விகடன் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது இதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 2 மணிக்கு உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடந்துள்ளது. மேலும் புகாரில் மூன்றாவது குற்றவாளியாக ஜூனியர் விகடன் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்ய காவல்துறைக்கு உரிமை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஊடக சுதந்திரத்தை மதிக்கும் முதல் அமைச்சர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த விவாகாரத்தில் பல்வேறு பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் காவல்துறை நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Source - Asianet News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News