தமிழகத்தை மருத்துவ தரத்தில் உயர்த்தியதாக தி.மு.க செய்யும் போலி பிரச்சாரம் - உண்மையில் நடந்தவை என்ன?
By : Mohan Raj
நாட்டில் தற்பொழுது கொரோனோவின் கொடிய அலை வீசி வருகிறது. இந்த காலகட்டத்தில் எத்தனையோ தனியார் மருத்துவ கல்லூரிகள், மருத்துவமனைகள், உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை வசதிகள் நம் தமிழ்நாட்டில் இருந்தாலும் இன்றளவும் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளே மக்களுக்கு உதவி புரிந்து வருகின்றன.
காரணம் தனியார் மருத்துமனைகளில் வசதிகள் இருந்தாலும் சாமானிய மக்களால் கொரோனோ சிகிச்சைக்கு அதிக பணம் செலவழிக்க இயலாத காரணத்தால் அரசு மருத்துகல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளே முன் நின்று மக்களை மரணத்தின் பிடியில் இருந்து காத்து வருகின்றன.
இந்த நிலையில் தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் வழக்கம்போல் ஆபத்து காலத்தில் குட்டையை குழப்பி அதில் மீனை பிடிப்பது போல் இந்த பேரிடர் காலத்திலும் "பார்த்தீர்களா எங்கள் ஆட்சிகாலத்தில் நாங்கள் செய்த மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனைகள்தான் இன்று மக்களை காத்து வருகின்றன என சுய தம்பட்டம் அடித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள்தான் இதுபோன்ற ஆபத்து காலத்தில் ஆதாரமில்லாத அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். இதன் உண்மைதன்மையை சற்று வரலாற்றை வைத்து ஆராய்ந்து பார்க்கும்போது பல வரலாற்று நிகழ்வுகள் நமக்கு கிடைக்கின்றன.
அதிலும் குறிப்பாக இப்பொழுது எதிர்கட்சியாக இருந்துகொண்டு ஆபத்து காலம் என்று கூட கருதாமல் நாங்கள் ஆட்சியில் அதை செய்தோம், இதை தூக்கி நிறுத்தினோம் என தி.மு.கவை சேர்ந்தவர்கள் பொய் பிரச்சாரம் செய்வதன் உண்மைத்தன்மை அப்பட்டமாக வெளிவருகிறது.
தமிழகத்தின் மருத்துவகல்லூரிகள் துவங்கப்பட்ட ஆண்டு அதன் ஆட்சிகாலம் அப்போதைய முதலவர் யாரென பார்த்தால் தி.மு.கவினரின் பொய்யான பிரச்சாரம் சாயம் வெளுத்து பல் இளிக்கிறது.
வரலாற்றை முதல் மருத்துவகல்லூரியான "மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்"லிருந்து பார்ப்போம். "எம்.எம்.சி எனப்படும் சென்னை மருத்துவ கல்லூரி துவங்கப்பட்ட ஆண்டு 1935 பிரிட்டிஷார் காலத்தில் அப்பொழுது 'வில்லியம் ஹென்றி' என்பவர் சென்னை மாகாணம் தலைவராக இருந்தார்.
அடுத்தபடியாக 'ஸ்டான்லி மருத்துவகல்லூரி' மற்றும் 'மதுரை மருத்துவகல்லூரி' இவை இரண்டும் முறையே 1938 மற்றும் 1954ம் ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் ராஜாஜி அவர்கள் முதல்வராக இருந்தபோது துவங்கப்பட்டது.
பின்னர் 1958'ம் ஆண்டு மற்றும் 1960'ம் ஆண்டுகளில் காமராஜர் ஆட்சிகாலத்தில் 'தஞ்சாவூர் மருத்துவகல்லூரி' மற்றும் 'கீழ்ப்பாக்கம் மருத்துவகல்லூரி' ஆகியவை துவங்கப்பட்டன.
பின்னர் அதே காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் பக்தவச்சலம் அவர்கள் முதல்வராக இருந்தபோது 1965 & 1966 என இரண்டே ஆண்டுகளில் தமிழகத்தில் 'செங்கல்பட்டு', 'கோயமுத்தூர், 'திருநெல்வேலி' என மூன்று மருத்துவகல்லூரிகள் நிறுவப்பட்டன.
இதன் பிறகுதான் தமிழகத்தில் திராவிடகட்சிகளின் ஆட்சிகாலம் துவங்கியது. இதில் அ.தி.மு.கவின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 11 முக்கிய மருத்துவ கல்லூரிகள் துவங்கப்பட்டன. அதில் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் முதல்வராக இருந்தபோது 1983 மற்றும் 1986'ம் ஆண்டுகளில் 'சேலம் மருத்துகல்லூரி', 'IRT பெருந்துறை' எனப்படும் 'ஈரோடு மருத்துவகல்லூரி' மற்றும் எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து முதல்வரான ஜெ.ஜெயலலிதா'வின் ஆட்சி காலத்தில் 'தேனி மருத்துவகல்லூரி', 'வேலூர் மருத்துவகல்லூரி', 'திருவண்ணாமலை மருத்துவ கல்லூரி', 'புதுக்கோட்டை மருத்துகல்லூரி', 'கரூர் மருத்துவகல்லூரி', 'சென்னை ESI', 'சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரியை அரசு கையகப்படுத்தியது' மேலும் தி.மு.க ஆட்சி காலத்தில் பணத்தை வாரி இறைத்து கட்டிய கட்டிடமான மாளிகையை மக்களுக்கு பயன்படும் விதமாக "ஓமந்தூரார் மருத்துவ கல்லூரியாக மாற்றியது என அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லூரிகள் முழு வசதிகளுடன் கிடைத்தன.
இன்று அனைத்தையும் நாங்கள்தான் உருவாக்கினோம் என்ற மாயபிம்பத்தை உருவாக்க முயலும் தி.மு.க ஆட்சி காலத்தில் 7 மருந்துவ கல்லூரி மட்டுமே தமிழகத்திற்கு தர முடிந்தது இத்தனைக்கும் கருணாநிதி 5 முறை தமிழகத்தை ஆட்சி செய்தார்.
இவற்றிற்கும் மேலாக தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசு மத்திய அரசுடன் இணைந்து மேலும் 6 மருத்துவகல்லூரிகளை தமிழகத்திற்கு தர வேலைகளை துவங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த மருத்துவகல்லூரிகள் திருப்பூர், ஊட்டி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் என மாநகர் இல்லாத பகுதிகளில் எளிய மக்களுக்கு சேவை செய்வதற்காகவே துவங்கப்படவுள்ளது.
இப்படி 17 மருத்துவகல்லூரிகளை தமிழகத்திற்கு ஏற்படுத்த காரணமாக இருந்த அ.தி.மு.க அரசு தற்புகழ்ச்சி இன்றி மக்களின் சேவையே குறிக்கோளாக கொண்டு இயங்கும் போது 5 முறை முதல்வராக இருந்தும் 7 மருத்துவகல்லூரிகளை மட்டுமே துவங்கிவிட்டு தமிழகத்தை நாங்கள்தான் பாதுகாத்தோம், தமிழகர்கள் விடும் மூச்சு காற்றே தி.மு.க'தான் என்கிற ரீதியில் தி.மு.க'வினர் பேசி வருவது அபத்தம். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் 5 முறை முதல்வராக இருந்தபோது துவங்கிய மருத்துவ கல்லூரி 7 மட்டுமே ஆனால் தனியார் சேனல்கள் மட்டும் 15 தாண்டும்.
மக்கள் விழிப்புடன் உள்ளனர் தி.மு.க'வினரே 30 ஆண்டுகளுக்கு முன் உங்கள் கட்சி தொண்டர்கள் டீக்கடைகளில் தோளில் கருப்பு, சிவப்பு துண்டுடன் அள்ளி வீச வளர்த்த கதைகளை நம்பி தி.மு.க பின் கண்மூடித்தனமாக சென்ற மக்கள் இல்லை தற்பொழுது.