Kathir News
Begin typing your search above and press return to search.

"நான் யாரு தெரியுமா?" - பல் இளிக்கும் தமிழக நிதி அமைச்சரின் செயல்பாடுகள்

நான் யாரு தெரியுமா? -  பல் இளிக்கும் தமிழக நிதி அமைச்சரின் செயல்பாடுகள்

Mohan RajBy : Mohan Raj

  |  30 May 2021 5:45 AM GMT

"பொறுப்பு" இந்த வார்த்தை மிக கனமானது. ஒரு சாமானியன் தான் செய்யும் செயல்களில் இந்த "பொறுப்பு" தெரிய வேண்டும், தான் பேசும் வார்த்தைகளில் "பொறுப்பு" பிரதிபலிக்க வேண்டும், தன் நடந்துகொள்ளும் விதத்தில் மனதில் உள்ள "பொறுப்பு" வெளிப்படையாக இருக்க வேண்டும். இப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையில் "பொறுப்பு" மிக மிக தவிர்க்க முடியாத ஒன்றாகும் இல்லாத பட்சத்தில் செய்யும் செயல்கள் அர்த்தமற்று போகும், பேசும் வார்த்தைகள் மதிப்பற்று போகும், நடந்துகொள்ளும் விதம் நாடகத்தனமாக விளங்கும். இப்படி சாதாரண மனிதனுக்கே "பொறுப்பு" இந்தளவிற்கு முக்கியம் என்றால் தமிழகம் போன்ற பெரிய மக்கள் தொகை கொண்ட மாநிலத்தின் மக்கள் நிதி நிலைமையை கண்காணித்து, கட்டுக்குள் வைத்திருக்க போகும் நிதி அமைச்சருக்கு "பொறுப்பு" எவ்வளவு முக்கியம்?

மக்களின் முன் பேசும் வார்த்தைகள், ஊடகங்கள் முன் பதில் சொல்லும் விதங்கள், மற்றவர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பக்குவம், தன்நிலை ஏதுவாயினும் அதனை தாழ்த்திக்கொண்டு தனக்கிருக்கும் பணியை கருத்தில் கொண்டு செயல்படும் முதிர்ச்சி இப்படி இருக்க வேண்டிய தமிழகத்தின் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எப்படி நிஜத்தில் இருக்கிறார் என பார்த்தால் ஏமாற்றமே மிச்சும்!

"நான் நாட்டோட அமைச்சருங்க, யார் யாருக்கு பதில் சொல்லனும் என எனக்கு தெரியும்" என்கிற பதிலில் தெரியும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் வீண் வீம்பு. கேள்வி எழுப்புபவருக்கு பதில் சொல்ல இயலவில்லை எனபதை தனக்கிருக்கும் பதவியை குறிப்பிட்டு தன் இயலாமயை பதவியால் போர்த்துகிறார் தமிழக நிதி அமைச்சர்.

"பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தவன்" என்ற வசனத்தின் மூலம் தன் பாரம்பரிய குடும்பத்தின் நிலை இதுதான் என ஊரார் முன் வெளிச்சம் போட்டு காட்டி அசிங்கப்படுகிறார் பாரம்பரிய குடும்ப வாரிசு! "கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" என்பது போல பாரம்பரிய குடும்ப வாரிசு என்பது பார்ப்பவர்கள் பார்வையில் இல்லை தான் நடத்தையில் இருக்கிறது என்பதை பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் "பாரம்பரிய குடும்ப" மூத்தோர்கள் ஒருவர் கூடவா சொல்லி வளர்க்கவில்லை இவரை? அல்லது "பாரம்பரிய குடும்ப" மூத்தார்களே மதிப்பில்லாமல் தான் வாழ்ந்தார்களா?

"பெரிய நிறுவனங்களில் பணியாற்றியவன்" என்ற ஜம்ப வார்த்தைகள் வேறு, இப்பொழுது பேசி வருவது போல் பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் சமயம் பேசியிருந்தால் என்னவாகியிருக்கும்? இவரை அடுத்த கணமே வெளியேற்றியிப்பார்கள்.

மேலும் "அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?" மற்றும் "அவன் இவன்" என்ற ஏக வசனங்கள் வேறு அவ்வபோது, "நாங்கள் உயர்ந்தவர்கள்! எங்களிடம் நீ எப்படி பேசலாம்?" என்ற ஆணவ பேச்சு பேசும் உங்களை மேடைக்கு மேடை சமத்துவம் பேசும் தி.மு.க எப்படி அமைச்சராக்கியது? நீங்கள் தி.மு.க'வை ஏமாற்றினீர்களா? அல்லது போலி சமத்துவம் பேசி மக்களை தி.மு.க ஏமாற்றுகிறதா? இதில் எது உண்மை என நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அல்லது தி.மு.க விளக்கி கூற வேண்டும்.

சரி இவரின் பண்பு இல்லாத நடத்தைகள் தான் இவ்வாறு சிறுபிள்ளதனமாக இருக்கிறதே என பார்த்தால் இவர் இருக்கும் "நிதி அமைச்சர்" என்ற மாபெறும் பொறுப்பையே சிறு பிள்ளதனமாகதான் கையாளுகிறார் என நேற்றைய ஜி.எஸ்.டி கவுன்சில் சந்திப்பில் தெரிந்துவிட்டது.

நேற்று டெல்லியில் நடந்த 43'வது ஜி.எஸ்.டி கூட்டதில் தமிழகத்தின் சார்பில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டார்.

தான் கலந்துகொண்ட முதல் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் எதற்கு கூட்டப்பட்டது என ஒரு நிதி அமைச்சர் தெரியாமலேயே கலந்து கொண்ட முதல் நபர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனாக'தான் இருப்பார். காரணம் ஜி.எஸ்.டி கூட்டத்தில் ஒரு மாநில நிதியமைச்சர் "மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை என்பதை நினைவில் கொள்வது சிறப்பு" என சம்மந்தம் இல்லாமல் பேசி இவரின் அறியமையை வெளிப்படுத்தியுள்ளார். மத்திய, மாநில அரசின் உரிமைகளை அதுவம் நிதி, சேவை வரிகள் தொடர்பான கூட்டத்திலா சென்று பேசுவது? அது என்ன நாடாளுமன்ற பொது வாக்கெடுப்பு கூட்டமா? இல்லை அங்கு தலைமை வகித்தவர் உள்துறை அமைச்சரா? அல்லது பி.டி.ஆர்'தான் மாநிலங்கள் உரிமை பற்றி பேச அங்கீகரிக்கப்பட்ட நபரா?

மேலும் அங்கு அவர் பேசும் போது, "கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் மற்றும் அபராதங்கள் கொண்ட சட்டங்களை விதித்துள்ளதன் மூலம் அமைப்பிலுள்ள குறைபாடுகளை ஈடுசெய்யும் உத்தி, சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துவோர் மற்றும் மதிப்பீட்டாளர்களைத் அதற்கெதிராக சிந்திக்கத் தூண்டியுள்ளது" என இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படு வெற்றிகரமாக செயல்படும் ஜி.எஸ்.டி திட்டத்தை எதிர்ப்பது மட்டுமின்றி முறையாக வரி செலுத்த துவங்கியுள்ள வரி செலுத்துவோரை இந்த ஜி.எஸ்.டி திட்டத்திற்கு எதிராக தூண்டும் விதமாக பேசியிருக்கிறார் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். இதற்கா தி.மு.க இவரை மாநில நிதி அமைச்சராக்கியது. மேலும் இவர் இந்த மன நிலையில் இருந்தால் இந்த திட்டத்தை எவ்வாறு சரிவர செயல்படுத்துவார்?

இது மட்டுமின்றி ஜி.எஸ்.டி நிலுவை தொகை வழங்கப்படவில்லை என ஆதாரமின்றி பேசியுள்ளார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் "உங்களுக்கு வர வேண்டிய நிலைவை தொகையை என்னவெற்று மாநில அரசின் ஒப்புதலுடன் கேட்கவும், இதுவரை எந்த ஒரு வரித்தொகையும் நிலைவையில் இல்லை என கூறியிருக்கிறார். ஒரு மாநிலத்தின் அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எப்படி சரியான, முழுமையான தகவல்கள் திரட்டாமல் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டார்? இதுதான் இவர் படித்த படிப்பு மற்றும் வேலை செய்த பெரிய நிறுவனங்களின் லட்சணமா? இதை இவர் இத்தனை நாள் பெருமையாக பேசினார்?

ஆக மொத்ததில் விவரங்கள் இன்றி, வீண் பெருமை, விதண்டாவாதம் பேசி திரியும் ஒருவரை தி.மு.க அரசு நிதி அமைச்சராக நியமித்துள்ளது. வேறு ஆட்கள் இல்லையா? அல்லது தி.மு.க'வே இவ்வாறுதானா?

Next Story
கதிர் தொகுப்பு
Trending News