ஆரோக்கியமாக இருக்க தினமும் செய்ய வேண்டிய அடிப்படை யோகா பயிற்சிகள்.!
By : Bharathi Latha
யோகா பல ஆரோக்கிய நன்மைகளையும் உடலுக்கு தர வல்லது. மேலும் வீட்டில் இருந்த பலர் வேலைகளை தற்போது செய்துகொண்டு வருகின்றனர் இதன் காரணமாக அவர் உடல் நலத்திற்கு பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. எனவே இதற்கு யோகா ஒரு சிறந்த தீர்வாக அமையும். எனவே வீட்டிலிருந்து எளிதான முறையில் யோகா செய்வது எப்படி? சிறந்த முறையில் அவற்றை செய்வது எப்படி? என்பதை இப்போது பார்க்கலாம். எளிய யோகா ஆசனங்களைப் பின்பற்றுவதன் மூலம் சுகாதார நன்மைகளை பெற முடியும்.
முதலில் விருக்ஷாசனம் இடம்பெறுகிறது. இது எளிதான ஒரு யோகா முறை. இந்த யோகாசனம் கவனம் மற்றும் மனதின் சமநிலையை மேம்படுத்துகிறது. இந்த யோகாசனம் செய்ய முதலில் நேராக நிற்கவும். பின்னர் உங்கள் கைகளை மேலே உயர்த்தி உள்ளங்கைகளை ஒன்றாக இருக்கும்படி இணைக்கவும். ஒரு காலில் நிலையாக நின்று, மற்றொரு பாதத்தை நிற்கும் காலின் தொடைக்கு அருகில் கொண்டு வாருங்கள். சில வினாடிகள் இதே நிலையில் நில்லுங்கள். அடுத்தது தடாசனம் இதுவும் மிகவும் பயனுள்ள ஒரு யோகாசனம். இந்த யோகாசனத்தைச் செய்ய, கால்களை அகற்றி நேராக நின்று கொள்ளுங்கள். கைகளை நேராக நீட்டி கோர்த்துக்கொண்டு அப்படியே திருப்பி தலைக்கு மேல் உயர்த்திக்கொள்ளுங்கள். இப்போது பின்னங்காலை உயர்த்தி கால் விரல்களில் நிற்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உடலுக்கும் மனதுக்கும் ஒரு நிலைத்தன்மை கிடைக்கும். தசைகள் நீட்டிப்படைந்து உடல் வளர்ச்சி பெறும்.
கடைசியாக, உத்தனாசனம் மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு உங்கள் கால்களை நோக்கி முன்பக்கமாக வளைந்து கொள்ளுங்கள். தொடை எலும்புகள் முதலில் சற்று இறுக்கமாக உணர்ந்தால், முழங்கால்களை லேசாக வளைத்துக்கொள்ளுங்கள். கால்களை அகலமாக வைத்து, உங்கள் கைகளை தரையில் தொட்டு உங்கள் தலை முழங்காலை நோக்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த யோகாசனம் குறிப்பாக மாதவிடாய் நிறுத்தத்தின் அறிகுறியைப் போக்க உதவுகிறது. தூக்கமின்மை பிரச்சினையைக் குறைக்கிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
குறிப்பு : இந்த கட்டுரையில் உள்ள கருத்துக்கள் வெறும் தகவலுக்காக மட்டுமே. எனினும் இது போன்ற பயிற்சிகளை ஒரு யோகா ஆசிரியரின் மேற்பார்வையில் செய்ய வேண்டும்