Kathir News
Begin typing your search above and press return to search.

முதலைகள் முதல் அணில்கள் வரை தி.மு.கவின் சிறப்பான ஆட்சி மக்களுக்கு கிடைக்க விடாமல் இடையூறு செய்யும் வரலாறு!

முதலைகள் முதல் அணில்கள் வரை தி.மு.கவின் சிறப்பான ஆட்சி மக்களுக்கு கிடைக்க விடாமல் இடையூறு செய்யும் வரலாறு!

Mohan RajBy : Mohan Raj

  |  23 Jun 2021 1:45 AM GMT

தி.மு.க வரலாற்றில் ஆளும்கட்சியாக இதுவரை இருந்த காலத்தில் வாயில்லா பிராணிகளால் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தி.மு.க ஆட்சியை மக்களுக்கு சரிவர தர இயலாமல் முதலைகள் முதல் அணில்கள் வரை சதாசர்வகாலமும் பிரச்சினை தந்துகொண்டே இருக்கின்றன. அப்படி வாயில்லா பிராணிகளால் தி.மு.க தவித்த வரலாற்றை பார்ப்போம்.

1) முதலையால் பாதிக்கப்பட்ட தி.மு.க, 1967 ஆம் ஆண்டு அண்ணா ஆட்சியின் போது கருணாநிதி தான் பொதுப்பணித்துறை அமைச்சர். சென்னையில் உள்ள கூவம் நதியை சுத்தம் செய்ய முதல் கட்டமாக 3 கோடி ரூபாயை 'ஒதுக்குவதாக' அறிவித்தார் கருணாநிதி. பிறகொரு நாளில் சட்டசபையில் கம்யூனிஸ்டுகள் இது குறித்து 'ஏன் இன்னும் இந்த திட்டத்தை செயல்படுத்தவில்லை' என கேள்வி எழுப்பினார்கள், அது குறித்து மூன்று நாளில் அறிக்கை தருகிறேன் என்றார் சட்டசபையில் கருணாநிதி.

அடுத்த நாளே பத்திரிக்கைகளில் ஒரு பரபரப்பு செய்தி வந்தது ….

கூவம் நதியில் முதலை ..! மக்கள் அலறி ஓட்டம் ..! என்பது தான் அந்த செய்தி.

அடுத்த நாள் சட்டசபையில் கருணாநிதி விளக்கம் தருகிறார் … 'கூவம் நதியில் முதலை இருப்பதால் வேலை செய்யும் பணியாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய மறுத்துவிட்டதால் கூவம் நதி சுத்திகரிப்பு திட்டம் கைவிடப்படுகிறது' என்று அறிவித்தார்.

இப்படியாக கூவத்தை சுத்தப்படுத்த தி.மு.க முயற்சித்த போது முதலை வந்து தடுத்தது.

2) எறும்பு மற்றும் கரையான்கலால் பாதித்த தி.மு.க திட்டம்,

ஒருமுறை கருணாநிதி ஆட்சியில் இருந்த போது பொது விநியோகத்திற்காக 27 ஆயிரம் சக்கரை மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தது மாயமாகின. இதன் வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் சக்கரை மூட்டைகளுக்கு கணக்கு கேட்ட பொழுது அதனை எறும்புகள் தின்றுவிட்டதாகவும், சாக்கு மூட்டைக்கு கணக்கு கேட்ட பொழுது அதனை கரையான் அரித்துவிட்டதாகவும் கருணாநிதி தரப்பில் கூறப்பட்டது.

இப்படியாக எறும்புகளும், கரையான்களும் மக்களுக்கு நல்லது செய்ய விடாமல் தி.மு.கவை தடுத்தன.

3) அணில்களால் ஏற்பட்ட மின்துறை இழப்பு,

சரி 30 ஆண்டுகளுக்கு முன் தொழில்நுட்ப வளர்ச்சி போதுமானதாக இல்லை வாயில்லா ஜீவன்கள் தி.மு.க'வின் நல்ல திட்டங்களை மக்கள் அனுபவிக்க விடாமல் தடுத்தன என்று பார்த்தால் தற்பொழுது அணில்கள் ரூபத்திலும் மக்களுக்கு தி.மு.க ஆட்சியின் நன்மைகள் கிடைக்காமல் செய்து வருகின்றன.

இரண்டு தினங்கள் முன் தமிழக மின்துறை அமைச்சர் சமீப காலமாக தி.மு.க ஆட்சியில் ஏற்பட்ட மின்தடைக்கு விளக்கம் கூறும் விதமாக ஓர் கருத்தை முன் வைத்தார். அதில், "மின் கம்பிகளில் அணில்கள் ஓடி விளையாடுவதால் இரு கம்பிகளுக்கு இடையே உராய்வு ஏற்பட்டு மின் தடை ஏற்படுகிறது" என்றார்.


இதனை உறுதிபடுத்தும் விதமாக நேற்று மாலை தனது ட்விட்டர் பதிவில் அணில்கள் மின் கம்பியில் ஓடும் புகைப்படங்களை பதிவிட்டு நிரூபனம் வேறு செய்திருந்தார். இப்படியாக அணில்கள் தி.மு.க ஆட்சியின் நன்மைகளை மக்களுக்கு கிடைக்க விடாமல் செய்து வருகின்றன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News