உலகையே தன்னுடைய கோரப் பிடியில் வைத்திருக்கும் கொரோனாவின் உலகளாவிய பாதிப்பு!
By : Bharathi Latha
எவ்வளவுதான் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் உலக அளவில் பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் வருகின்றது என்றும் தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் மக்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வதன் மூலமாக தொற்றில் இருந்து குறைந்தபட்சம் தங்களுடைய உயிர்களை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. எனவே இத்தகைய கொடிய வைரஸ் தன்னுடைய கோரப்பிடியில் அனைத்து உலகத்தையும் கட்டி பிடித்து வைத்துள்ளது. இதனால் தற்பொழுது உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 கோடியை தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் 2வது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 கோடியை தாண்டியது.
மேலும் இத்தகைய தொற்று நோய்க்கு சுமார் 39 இலட்சம் மக்கள் தங்களுடைய இன்னுயிரை இழந்துள்ளனர். மேலும் கொரோனா பாதிப்புடன் தற்போதுவரை 11,367,425 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச பாதிப்பு மற்றும் உயிரிழப்பு பிரேசில் நாட்டில் பதிவாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.