நாட்டிலேயே இது கோவையில் தான் குறைவு - தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அதிரடி ரிப்போர்ட்!
By : TamilVani B
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உலகமெங்கிலும் நடந்து வருகிறது. பெண்ணை உடலளவிலும் மன அளவிலும் கொடுமை செய்யும் செய்திகளை தினம் கடந்து செல்லும் சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம்.
இந்தியாவிலும் இது போன்ற குற்றங்கள் தினசரி நிகழ்வாகின்றது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்கவும் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும் அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.
ஒவ்வொரு காலாண்டின் முடிவிலும் இந்திய அரசின் தேசிய குற்ற ஆவண காப்பகம் மாநிலங்களில் சேகரிக்கபட்ட தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் நடைபெற்ற குற்றங்களின் அடிப்படையில் அறிக்கை வெளியிடும்.
அதன் படி இதுவரை நாட்டில் உள்ள 19 பெருநகரங்களில் பெண்களுக்கு எதிரான 35,331 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2019 காட்டிலும் 21.1% குறைவான வழக்குகளே 2020 பதிவாகியுள்ளன. ஆனால் தலைநகர் டெல்லி, ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில் நாட்டில் 10 லட்சத்திற்கு அதிகமாக மக்கள் தொகை கொண்ட பெருநகரங்களில் கோவையில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக பதிவாகியுள்ளது என குறிப்பிடபட்டுள்ளது.
மேலும் தற்போது ஒட்டுமொத்தமாக நாட்டில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 8% குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.