பா.ஜ.க ஆளும் கர்நாடகத்தில் கட்டாய மத மாற்ற தடுப்புச்சட்டம் கொண்டுவரப்படுகிறதா? கலங்கி நிற்கும் மிஷனரிகள்
By : TamilVani B
கர்நாடக மாநிலத்தில் கட்டாய மதமாற்ற தடுப்பு சட்டத்தை கொண்டு வர பரீசிலிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் பொம்மை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, மாநிலத்தில் மதமாற்றம் தூண்டுதலின் பேரிலோ அல்லது வலுகட்டாயமாகவோ நடைபெற்றால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் வடக்கு பகுதியில் இருக்கும் கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மதமாற்றம் முயற்சி செய்ய வந்த கும்பலின் வீடியோ ஒன்று வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவில் பெண்களை வளையல் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிய கூடாது எனவும் மேலும் இந்த செயல் அரசாங்கதின் அனுமதி பெற்று நடைபெறுவதாகவும் கூறினர். இந்த வீடியோ சமூகவளைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் கடந்த வாரம் சட்டமன்றத்தில் உள்துறை அமைச்சர் அரேகா ஜானேந்திரா கட்டாய மதமாற்ற சட்டம் குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.ஏற்கனவே உத்ரபிரதேசம், இமாச்சலப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது. மேலும், அசாம், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சட்டம் குறித்து பரிசீலித்து வருகின்றன.
மேலும், கட்டாய மதமாற்ற தடை சட்டம் மதங்களுக்கு இடையிலான திருமணத்தை தடுப்பதற்காக கொண்டு வரபடவில்லை மாறாக கட்டாய மதமாற்றத்தால் நடைபெறும் குற்றங்களை கண்டறியவே இந்த சட்டம் என் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் சில மிஷினேரிகள் கட்டாய மதமாற்றம் செய்து வருவதை அரசு இரும்பு கரம் கொண்டு தடுக்கா வேண்டும் என வலது சாரி அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.