லென்ட் ஜிகாத்தை எதிர்த்து போராடும் உத்ரகாண்ட் மக்கள் !
By : TamilVani B
உத்ரகாண்டில் உள்ள தெஹ்ரி அணை கட்டப்படும் போது அங்கு தற்காலிக மசூதி ஒன்று அமைக்கப்பட்டது. அணை கட்டப்பட்டவுடன் அங்கிருந்து தொழிலாளர்கள் சென்று விட்டனர். ஆனால், அந்த தற்காலிக மசூதி மற்றும் அகற்படாமல் அப்படியே இருந்தது.
இந்த நிலம் தற்போது சுற்றுலா துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், சுற்றுலா துறைக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்ட சட்டவிரோத மசூதியை அகற்ற வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இது பற்றி அந்த போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆகாஷ் கூறும்போது, ஒவ்வொரு வெள்ளி கிழமையின் போதும் இங்கு நூற்றுகணக்கான மூஸ்லிம்கள் பிராத்தனைக்கு வருகின்றனர். அவர்கள் யாரும் உள்ளூர்வாசிகள் கிடையாது. அதுமட்டுமின்றி, இந்த மசூதியை நிர்வகிப்பவரும் இங்கிருந்து வெகு தொலைவில் உள்ளார். பிராத்தனை செய்து முடித்து வரும் போது சாலையில் அமர்ந்து பெண்களை கேலி செய்து வருகின்றனர். அது மட்டுமின்றி லவ் ஜிகாத் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கலேயானால் நாங்களே நடவடிக்கை எடுக்கும் படி நேரிடும்.அதனால் மாவட்ட நிர்வாகம் விரைந்து தீர்வு காணும் படி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பலமுறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 6 அன்று நடத்திய ஆர்பாட்டத்தின் போது அங்கு வந்த அதிகாரிகள் அந்த இடத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது மசூதியும் அதனை சுற்றுயுள்ள சில கடைகளும் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்பதை கண்டறிந்தனர். இதனால் அவற்றை அகற்ற உத்தரவு பிறப்பித்தனர். அப்போது மசூதி நிர்வாகி மாற்று நிலம் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இது குறித்து சிறுபான்மை ஆணையத்திடம் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகார் ஆக்கிரம்பிபுகளை அகற்றுவதை மேலும் தாமதப்படுத்தியுள்ளது.
அதனை தொடர்ந்து கடந்த 21 தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் 15 நாள் அனுமதி அளித்தது. ஆனால் அகற்றபடவில்லை இதனால் கடந்த 25 தேதி நிர்வாகத்திற்கு எதிராக மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். அப்போது பேச்சு வார்த்தையில் அந்த அதிகாரிகளுக்கும் ஆகாஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த மாவட்ட துணை மாஜிஸ்ட்ரேட் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டார். அப்போது மசூதி ஆகிரமிப்பு பகுதியில் இருந்தால் அது கண்டிப்பாக அகற்றபடும் என அவர் உறுதியளித்தார்.மேலும். அதற்கு காலாவகாசம் தேவைபடுகிறது எனவும் கண்டிப்பாக அகற்றபட்டு விடும் எனவும் அவர் உறுதியளித்தார்.
இப்படி சட்டவிரோதமாக மசூதி அமைக்க பெறுவது இது முதல் முறையல்ல ஏற்கனவே குஜராத்திலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று உள்ளன. அதே போல உத்திர பிரதேசத்தில் இந்து ஒருவருக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மசூதியை அந்த அரசாங்கம் அகற்றியது. இதே போல இந்த வழக்கிலும் செய்ய வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.