Kathir News
Begin typing your search above and press return to search.

"பொய்களால் பூவுலகை காத்திட முடியுமா" நண்பர்களே! தம்பிகளே! தோழர்களே! - சார்ந்தோருக்கு சாமானியர்களின் கேள்வி!

ஈஷா மையம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் வெளிவந்திருக்கும் தகவல்கள் தமிழ் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஒரு அமைப்பை குற்றவாளியாக நினைத்து சதா சர்வகாலமும் ஏக வசனத்தில் விமர்சித்துக் கொண்டும், கேலி-கிண்டல் பேசிக்கொண்டும் இருக்கையில் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தெரியும் போது சாமானியர்களான நமக்கு குற்றவுணர்வு மேலோங்குகிறது.

பொய்களால் பூவுலகை காத்திட முடியுமா நண்பர்களே! தம்பிகளே! தோழர்களே! - சார்ந்தோருக்கு சாமானியர்களின் கேள்வி!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Dec 2021 6:15 AM GMT

ஈஷா மையம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் வெளிவந்திருக்கும் தகவல்கள் தமிழ் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஒரு அமைப்பை குற்றவாளியாக நினைத்து சதா சர்வகாலமும் ஏக வசனத்தில் விமர்சித்துக் கொண்டும், கேலி-கிண்டல் பேசிக்கொண்டும் இருக்கையில் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று தெரியும் போது சாமானியர்களான நமக்கு குற்றவுணர்வு மேலோங்குகிறது.

மேலும் அவர்களை குற்றவாளிகளாக நம் கண்முன் நிறுத்தியவர்களையும், நம்ப வைத்தவர்களையும் மக்கள் மத்தியில் கூண்டில் நிறுத்தி 'ஏன் இந்த இழி செயலை செய்தீர்கள்' என்று கேட்கவும் தோன்றுகிறது.

ஈஷா மையம் மீது பல அவதூறுகள் பரப்பப்பட்டு வந்தன, முக்கியமாக 'வனத்தை ஆக்கிரமித்து/அழித்து', 'காடுகளை கபளீகரம் செய்து', 'யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து' 'சுற்றுச்சூழலுக்கு பேராபத்தான' போன்ற தலைப்புகளில் பல புலனாய்வு கட்டுரைகளை படித்து அப்படியே நம்பியிருப்போம்.

இந்த அவதூறுகளை துவக்கம் முதலே மறுத்து வந்ததுள்ளது அந்த அமைப்பு. ஆனாலும் குறிப்பிட்ட சிலர் தொடர்ந்து குற்றசாட்டுகளை முன் வைத்து வந்தனர். அதிலும் "ஈஷா மையம் பல ஏக்கர் வனத்தை அழித்து/ஆக்கிரமித்து தான் கட்டிடங்களை கட்டியுள்ளது" என்ற பிம்பத்தை உருவாக்கும் வகையில் எண்ணிலடங்கா கட்டுரைகளையும், காணொளிகளையும் சமூக ஊடகங்களில் சிறு கூட்டமொன்று பரப்பி வந்தனர்.

இதனால் உருவான போலி பிம்ப கட்டமைப்பை ஒரு வெகுளி தமிழ் சமூகமாக நாமும் நம்பிக் கொண்டிருந்தோம். ஆனால் அந்த குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை என்பது தான், தற்போது வெளிவந்திருக்கும் RTI தகவல்கள் நமக்கு சொல்லும் செய்தியாக இருக்கிறது.

தற்போது வெளியாகியிருக்கும் உண்மைகளை விட கனமானது "இவர்கள் எல்லாம் சொன்னால் சரியாக தான் இருக்கும் என்ற நம்பிக்கை உடைந்து போய் இருப்பது தான்." இதுநாள் வரை ஒரு அமைப்பின் மீதான இவர்களின் தனிப்பட்ட வெறுப்பினை கக்கி வந்துள்ளார்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. RTI தகவல்களை தாண்டி நாமே கொஞ்சம் தேடித் துருவிப் பார்த்தால் வெளி வரும் உண்மைகள் நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் இந்த போராளிகள் போர்வையில் சுற்றும் எவரையும் அப்படியே நம்பி விடக்கூடாது என்ற எண்ணத்தையும் விதைக்கிறது.

வனநில ஆக்கிரமிப்பு இல்லை!

நாம் தேடி அறிந்து கொண்ட வகையில், ஈஷா மையம் அமைந்திருப்பது முழுமையான பட்டா நிலம். அதுவும் பொறம்போக்கு நிலமாக வாங்கிய பிறகு பெறப்படும் பட்டாவோ அல்லது கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பிறகு ஆக்கிரமிக்கபட்ட நிலமோ அல்ல, அவர்கள் வாங்கியதே நூறு ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்பாட்டில் இருந்த பட்டா நிலங்கள் தான். வனத்தின் எல்லையையொட்டி அமைந்திருக்கிறது அவ்வளவே. இந்த ஒரு விசயத்தை வைத்தே பல கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டுள்ளனர்.


Read this article : https://isha.sadhguru.org/in/ta/blog/article/isha-kadugalai-akramithullatha-unmai-enna

வன-எல்லைக்கு வெகு அப்பால் இருக்கும் ஆதியோகி சிலை!

அதே போன்று ஆதியோகி சிலை அமைந்துள்ள பகுதியும் முழுமையான பட்டா நிலம், குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஆதியோகி சிலை வன எல்லையிலிருந்து வெகுவான தொலைவில் இருக்கிறது. ஆதியோகி சிலைக்கு அடுத்து சில பாக்கு தோப்புகள், சில குடியிருப்புகள் இருக்கின்றன அதற்கு அடுத்தே வன எல்லை துவங்குகிறது. ஆதியோகி சிலை அமைப்பதற்கும் முழுமையான அனுமதி வாங்கப்பட்டுள்ளது.


Read this article : https://isha.sadhguru.org/in/ta/blog/article/adiyogi-silai-kutrachattu-unmai-enna

யானைகளுக்கே தெரியாமல் கட்டமைக்கப்பட்ட வலசை பாதை கட்டுக்கதை!

அடுத்ததாக யானை வழித்தட அவதூறு, வனத்தையொட்டி அமைந்து உள்ள காரணத்தினால் மட்டுமே அதனை யானை வலசைப் பாதை என்று சொல்லிவிட முடியாது, மேலும் ஏதோ ஓரிரு முறை யானைகள் அவ்வழியாக வருவதாலும் அப்படி கூறிவிட முடியாது. அதற்கு மிக நீண்ட ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அப்படி பார்க்கும் போது "ரைட் ஆப் பாசேஜ்" என்ற யானைகள் வலசைப் பாதைகள் குறித்த மிக நீண்ட ஆழமான ஆய்வுகளுக்கு பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் கூட ஈஷா மையம் அமைந்துள்ள பகுதி வரவில்லை. ஆய்விலும் வராத, யானைகளுக்கும் தெரியாத பாதையை இந்த கூட்டம் மட்டுமே பொய்யாக கட்டமைத்துள்ளது.


Read this article : https://isha.sadhguru.org/in/ta/blog/article/isha-yaanai-vazhithadam-unmai-enna

கேள்விகள் கேட்போம்

இன்று இவர்களை நம்பி ஏமாந்திருக்கும் இந்த வெகுளி தமிழ் சமூகத்தின் சார்பில் நண்பர்களுக்கும், தோழமைகளுக்கும் & சார்ந்தோர் அனைவருக்கும் சில கேள்விகளை முன் வைப்போம்.

1. ஈஷா யோகா மையம் வனத்தை ஆக்கிரமிக்கவில்லை என்பது தற்போது வெளிவந்திருக்கும் RTI தகவல்கள் மூலம் உறுதியாகிறது. ஆனால் இத்துனை காலம் அவர்கள் வன நிலத்தை ஆக்கிரமித்து இருப்பதாக எங்களை எல்லாம் ஏன் பொய்யாக நம்ப வைத்தீர்கள்?

2. சத்குரு அவர்கள் 'ஒரு இன்ச் நிலம் ஆக்கிரமிக்கபட்டு இருக்கிறது என்று நிரூபியுங்கள் நாட்டை விட்டே வெளியேறுகிறேன்' என்று சவால் விட்டப் பிறகும் கூட, அதனை நிரூபிக்க எந்த முயற்சியையும் உங்கள் கூட்டம் ஏன் எடுக்கவில்லை?

3. ஈஷா மையம் அமைந்திருப்பது பட்டா நிலம் என்பதற்கான நூறு ஆண்டுகளுக்கு முந்தைய வரைபட ஆதாரங்களையும், நிலபுல எண்களையும் அம்மையம் பொது வெளியில் வழங்கிய பிறகும் கூட உங்களின் பொய்கள் தொடர்ந்தது ஏன்?

4. வன எல்லையில் இருந்து வெகு தூரம் அமைந்துள்ள ஆதியோகி சிலையும் வனத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்ற பிம்பத்தை உருவாக்க முயன்றது ஏன்?

5. ஈஷா மையம் யானைகள் வழித்தடத்தில் இல்லை என்ற உண்மை வெளிவந்த பிறகு வரையறுக்கப்படவில்லை, அங்கீகரிக்கப்படவில்லை என்ற சப்பை கட்டுகள் எதற்காக? அடுத்தவர் மீது குற்றம் சுமத்தும் போது தெளிவாக இருக்க வேண்டாமா?

6. தமிழகத்தில் அங்கிகரிக்கப்பட்ட வலசை பாதையை ஆக்கிரமித்துள்ள ரிசார்ட்டுகள், தேயிலை தோட்டங்கள், நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளிலோ இல்லை போராட்டங்களிலோ பெரிய ஈடுபாடு காட்டாத தாங்கள் ஈஷா மையம் குறித்து மட்டும் தொடர் அவதூறுகளை பரப்பியது ஏன்?

7. தமிழகத்தில் யானைகள் என்றாலே ஈஷா மையம் என்ற பிம்பத்தை உருவாக்கவும், எங்கும் சொல்லபடாத வலசை பாதையில் ஈஷா மையம் அமைந்துள்ளது என நிறுவ 'தனி-சிறப்பு' ஆர்வம் காட்டுவது ஏன்?

8. பூவுலகின் நண்பர்கள் தோராயமாக 7 வழக்குகளை ஈஷா மையம் மீது தொடர்ந்து இருக்குறீர்கள், அதில் 4 வழக்குகளுக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதிலும் ஒரு வழக்கில் 'உள்நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கு' என்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரே அமைப்பின் மீது எதற்காக இவ்வளவு வழக்குகள்?

9. இதே போன்று வேறு எந்த அமைப்பின் மீதோ அல்லது வணிக நிறுவனத்தின் மீதோ, அரசியல் கட்சிகள் & கட்சியினர் மீதோ தாங்கள் வழக்குகள் தொடர்ந்துள்ளீர்களா?

10. யானை வலசைப் பாதைகள் குறித்த "ரைட் ஆப் பாசேஜ்" என்ற ஆய்வு அறிக்கையிலோ அல்லது "கஜா" என்ற ஆய்வு ஆறிக்கையிலோ ஈஷா மையம் அமைந்திருக்கும் பகுதி வரவில்லை. உங்களுக்கு அவர்களைப் பிடிக்கவில்லை என்பதற்காக இல்லாத ஒன்றை கட்டமைப்பு செய்வீர்களா?

11. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஈஷா மையம் மீதான ஆக்கிரமிப்பு குற்றசாட்டுகள் அவதூறானவை, ஈஷா மையத்துடன் இருக்கும் சில பிரச்சனைகளுக்காக அவை பரப்பபடுகின்றன என்று சொல்லியிருக்கிறது வனத்துறை, இதற்கு பிறகு கூட தெளிவான குற்றசாட்டுகளை முன்வைக்காதது ஏன்?

12. கட்டிட முன் அனுமதி பெறவில்லை என்ற ஒற்றை குற்றச்சாட்டிற்கு பின் ஒளிந்துக் கொண்டு இத்தனை காலமும் ஆக்கிரமிப்பு தொடர்பான பொய் பரப்புரையை ஏன் செய்தீர்கள்? அந்த ஒரே ஒரு குற்றச்சாட்டை மட்டும் கூறியே போராடி இருக்கலாமே?

13. வனத்துறை தெளிவாக ஆக்கிரமிப்பு இல்லை என்று கூறிய பின்னரும் 'காடு எங்கடா ஜக்கி' 'saveforestfromjaggi' 'IshaDestroysForest' போன்ற ட்விட்டர் டிரண்டிங்'கள் உங்கள் கூட்டத்தினரால் ஏன் திட்டமிட்டு பரப்பபட்டது? அப்படியானால் வனம் & யானைகள் மீதான அக்கறையையும் தாண்டி இதில் உங்களுக்கான நோக்கம் என்னவாக இருக்கிறது?

14. நீங்கள் உருவாக்கிய போலியான பிம்பத்தை பொய் என நிறுவிய பிறகு நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டு உங்கள் சமூக ஊடக சிப்பாய்களை கொண்டு நாங்கள் அப்படி சொல்லவில்லை என தினமும் காணொளிகளையும், கட்டுரைகளையும் அள்ளி வீசுவது அசிங்கமாக இல்லையா?

15. ஒரு பொய்யை நூறு முறை கூறினால் அது உண்மையாகி விடும் என்ற நம்பிக்கையில் சொல்லி வந்தீர்களா? அல்லது மக்கள் எங்கு சென்று ஆராயப் போகிறார்கள், நாம் சொல்லுவதை அப்படியே நம்பும் முட்டாள்கள்தான் தமிழர்கள் என்ற அதீத நம்பிக்கையில் உங்கள் பொய்களை தொடர்ந்தீர்களா?

முதலில் 'நாங்கள் இதுநாள் வரை பரப்பிய வனநில & யானை வழித்தட ஆக்கிரமிப்பு/அழிப்பு என்பது பொய் என ஒப்புக்கொள்ளுங்கள், பிறகு மற்ற குற்றசாட்டுகளை முன் வையுங்கள்'.

பொய்யுலகின் நண்பர்களா அவர்கள்?

ஆக, "ஈஷா மையம் ஏக்கர் கணக்கில் வன நிலங்களை ஆக்கிரமித்தது என்பதும் பொய், வன நிலங்களை அழித்தது என்பதும் பொய், ஆதியோகி சிலை வனத்தை அழித்து உருவாக்கப்பட்டது என்பதும் பொய், ஈஷா மையம் யானைகள் வழித்தடத்தில்/ வாழ்விடத்தில் அமைந்துள்ளது என்பதும் பொய்." இவ்வளவு பொய்களையும், உண்மையாக நம்மிடம் சித்தரித்து இருக்கிறார்கள். இதை பார்க்கும் போது 'பொய்யுலகின் நண்பர்களா அவர்கள்' என்ற கேள்வி நம்முள் எழாமல் இல்லை.

சட்டத்தின் மூலம் காணப்பட்ட தீர்வு

ஈஷா மையம் மீது சொல்லிக் கொள்ளும் படி இருக்கும் ஒரே ஒரு குற்றச்சாட்டு 'முன்-அனுமதி பெறாமல்' கட்டப்பட்ட கட்டிடங்கள். இதுவும் முன் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட என்று சொல்லுவதைக் காட்டிலும், ஒரு சில அரசுத் துறைகளின் 'தடையில்லா சான்று பெறாமல்' என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.

வனத்தையொட்டி கட்டப்படும் கட்டிடங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில் சட்டங்கள் குறித்த சரியான விழிப்புணர்வு இல்லாமல் இவ்வாறு நிகழ்ந்துவிடும் நிகழ்வுகளுக்கு, பிறகான அனுமதி வழங்க சட்டம் உரிய இடம் அளிக்கின்றது. அதன் பொருட்டு இருக்க கூடிய உரிய வழிமுறைகளை பின்பற்றி ஈஷா மையம் தேவையான அனுமதியினை அதன் கட்டிடங்களுக்கு பெற்றுள்ளது.


Read this article : https://isha.sadhguru.org/in/ta/blog/article/isha-arakatalayin-anaithu-kattidangalum-satta-poorvamanathu

இதைப் பற்றி எல்லாம் பேசாமல் தடையில்லா சான்று பெறாமல் இருந்த போது தொடரப்பட்ட வழக்கு மற்றும் அறிக்கைகளை மட்டுமே கொண்டு தொடர்பில்லாத அவதூறுகளை பரப்புவதை ஏற்க இயலாது.

"தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்" இது வள்ளுவன் வாக்கு, நீங்கள் தெரிந்தே பரப்பிய பொய்கள் உங்கள் இதயங்களை சுடாவிட்டாலும், இனியேனும் கொஞ்சம் உண்மையோடு வாழப் பழகுங்கள்.

கடந்த பத்தாண்டுகளில் ஈஷா மையம் சந்தித்த அளவிற்கு ஊடக & சமூக ஊடக தாக்குதலை வேறெந்த அமைப்பும் சந்தித்ருக்காது. இனியாவது நாம் போலி பிம்ப கட்டமைப்புகளுக்கு விழாமல் உண்மையின் பக்கம் நிற்ப்போம்!

இறுதியாக 'பொய்களால் பூவுலகை காக்க முடியாது' நண்பர்களே!! தம்பிகளே!!தோழர்களே!!

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; இறுதியில் தர்மமே வெல்லும்!!!

Next Story
கதிர் தொகுப்பு
Trending News