Kathir News
Begin typing your search above and press return to search.

ஒதுக்கப்பட்ட காங்கிரஸ், ஆம் ஆத்மி முக்கியத்துவம் - காங்கிரஸ் இல்லா இந்தியாவை விரைவில் அமல்படுத்த துடிக்கும் ஸ்டாலின்?

ஒதுக்கப்பட்ட காங்கிரஸ், ஆம் ஆத்மி முக்கியத்துவம் - காங்கிரஸ் இல்லா இந்தியாவை விரைவில் அமல்படுத்த துடிக்கும் ஸ்டாலின்?

Mohan RajBy : Mohan Raj

  |  1 April 2022 12:15 PM GMT

டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி மற்றும் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்து முக்கியத்துவம் அளித்தது, காங்கிரஸ் கட்சியினருக்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுக்காமல் என இரண்டையும் வைத்து பார்க்கும்போது விரைவில் காங்கிரஸ் கூட்டணியை முதல்வர் ஸ்டாலின் முறித்துக் கொள்வாரோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.




நாளை யுகாதி பண்டிகையை முன்னிட்டு தி.மு.க'வின் டெல்லி அலுவலக திறப்பு விழாவிற்காக டெல்லி சென்றுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அங்கு சென்ற அவர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி எம்.பி'க்களை சந்தித்து பேசினார். மேலும் அங்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார். பிறகு அவர் தி.மு.க அலுவலகத்தில் இருந்த பொழுது சோனியா காந்தி அவரை சந்திக்க வருகை புரிந்தார். சோனியாதான் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க தி.மு.க அலுவலக அறைக்கு வந்தாரே தவிர முதல்வர் சோனியாவை சென்று சந்திக்கவில்லை. சோனியா காந்தியின் சந்திப்பு ஒரு சம்பிரதாயமாகவே தி.மு.க சார்பில் நேற்று கடைபிடிக்கப்பட்டது.







இன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவாலை சந்தித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். டெல்லியிலும், பஞ்சாபிலும் காங்கிரசை வேரோடு சாய்த்து இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் கெஜ்ரிவாலை சந்தித்ததன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை விட அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அதிக முக்கியத்துவம் தி.மு.க கொடுக்கிறது என்ற உண்மையையும் வெளிவந்துள்ளது.




சமீபகாலமாக பா.ஜ.க எதிர்ப்பு கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய அளவில் கூட்டணியை எடுத்துச் செல்ல ஸ்டாலின் திட்டமிட்டு வருவதை காணமுடிகிறது. இதன் விளைவாகத்தான் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் போன்ற கட்சியினருடன் தி.மு.க நெருக்கம் காட்டி வருவதையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில் டெல்லி விஜயத்தின் போதும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பெயரளவில் சந்தித்துவிட்டு ராகுல் காந்தியை சந்திக்காமல் விட்ட விவகாரம் சற்று சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை காங்கிரஸ் இல்லாத கட்சிகளை இணைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு கூட்டணியை உருவாக்கிவிட தி.மு.க திட்டம் தீட்டுகிறதோ எனவும் தோன்றுகிறது.

காங்கிரஸ் இல்லாத இந்தியாவை பா.ஜ.க உருவாக்க நினைத்தாலும் அதனை ஸ்டாலின், அரவிந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி போன்றோர் விரைவில் செயல்படுத்தி விடுவார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News