Kathir News
Begin typing your search above and press return to search.

ராமராஜ்ஜியம் பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய இரண்டே நாளில் டெல்லியில் ஆளுநரை மாற்ற கோரி அடம்பிடிக்கும் தி.மு.க

ராமராஜ்ஜியம் பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய இரண்டே நாளில் டெல்லியில் ஆளுநரை மாற்ற கோரி அடம்பிடிக்கும் தி.மு.க
X

Mohan RajBy : Mohan Raj

  |  4 April 2022 11:21 AM GMT

ஆளுநர் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை பெறக்கோரி மக்களவையில் தி.மு.க எம்.பி'க்கள் அமளியில் ஈடுபட்டனர்


தமிழகத்தில் தி.மு.க அரசு அமைந்ததில் இருந்து அமைந்த பிறகு ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். அவர் வந்த நாள் முதலே தி.மு.க'விற்கு அவரது அரசியல் ரீதியான நடவடிக்கைகள் பிடிக்கவில்லை.தி.மு.க வன் அரசியல் நாடகமான நீட் தேர்வு திரும்பப்பெறும் மசோதாவை திருப்பி ஆளுநர் அனுப்பியதாக முதலில் எதிர்ப்பை காட்டியது. பின்பு மத்திய அரசின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்தது தி.மு.க தரப்பு.

இதுபோன்ற சம்பவங்கள் தி.மு.க'விற்கு ஆளுநர் ரவி மீது அதிருப்தியை வரவழைத்தது, இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி "மாநிலங்கள் வளர்வதை காட்டிலும் நாட்டு ஒற்றுமை வளர வேண்டும் என் கூறியதும், இரு தினங்களுக்கு முன் சென்னையில் ஸ்ரீ ராம் சமாஜத்தில் ஆளுநர் கலந்து கொண்டு ராமா நவமி விழாவை துவங்கி வைத்து 'இன்றைய மிக முக்கிய காலத்தில் நம் நாடு அனைவரின் வளர்ச்சியையும் உள்ளடக்கி ராமராஜ்யத்தை நோக்கி முன்னேறி வருகிறது' என குறிப்பிட்டது தி.மு.க'விற்கு அடிவயிற்றில் நெருப்பை போட்டது போல் ஆகிவிட்டது.


காரணம் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய ஒற்றுமை, ராமராஜ்யம் என இரண்டையும் பேசியதுதான். தி.மு.க'விற்கு இரண்டுமே ஆகாது. வெளியில் நாட்டு நலன், இந்துக்கள் எங்கள் எதிரியல்ல என ஒட்டு வங்கிக்காக தி.மு.க கட்டிக்கொண்டாலும் உள்ளுக்குள் திராவிடர் கழக கடவுள் மறுப்பு அரசாகத்தான் இருக்கிறது தி.மு.க. அதற்கு இரு பெரிய உதாரணங்களாக 'மத்திய அரசை' 'ஒன்றிய அரசு' என பிரிவினைவாத நோக்கத்துடன் அழைப்பதும், ராமராஜ்யம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதுமே மிகப்பெரிய உதாரணம் ஆகும். இந்த நிலையே இன்று ஆளுநரை மாற்றவேண்டும் என டெல்லியில் சென்று அழும் நிலைக்கு தி.மு.க தள்ளப்பட்டிருக்கிறது.



இதற்கு நீட் மசோதா. நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் முடக்கம் என அரசியல் காரணங்களை தி.மு.க அடுக்குகிறது. ஆளுநர் ராமராஜ்ஜியம் பேசிய இரண்டே தினங்களில் டெல்லியில் சென்று தி.மு.க ஆளுநரை மற்ற மசோதா நிறைவேற்ற முயல்வது அரசியல் ரீதியான காரணங்கள் மட்டுமல்ல, கடவுள் மறுப்பு கொள்கை, நாட்டினின் பிரிவினைவாதம் என்ற இரண்டுமே பிரதானமாக தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News