மத்திய அரசுதான் காரணம் என மல்லுக்கட்டிய கே.என்.நேரு! சரணடைந்த ஸ்டாலின் - தி.மு.க'வின் சொத்துவரி உயர்வு நாடகம்
By : Mohan Raj
'மத்திய அரசின் நிபந்தனையால் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது' என நேற்று வரை அமைச்சர் கே.என்.நேரு கூறி வந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் 'சொத்து வரி உயர்வை மனமுவந்து செய்யவில்லை எதிர்க்கட்சிகள் துணை நிற்க வேண்டும் மக்கள் ஆதரவு தர வேண்டும்' என வேண்டி கேட்டுக் கொண்டுள்ளார்.
இரு தினங்களுக்கு முன்பு தி.மு.க அரசு 25% முதல் 150 சதவிகிதம் வரை தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் சொத்து வரியை உயர்த்தியது, இதற்கான அறிவிப்பை அரசு சார்பில் வெளியிட்டது. இந்த நிலையில் சொத்து வரி உயர்த்தப்பட்டது தொடர்பாக மக்களிடையே பல்வேறு எதிர்ப்பு குரல்கள் எழுந்து வந்த நிலையில் இந்த சொத்து வரியை உயர்த்த காரணம் மத்திய அரசுதான் எனவும், மத்திய அரசின் நிபந்தனையால்தான் நாங்கள் சொத்து வரியை உயர்த்தினோம் என அமைச்சர் கே.என்.நேரு கூறியது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் 2'ம் தேதி பேசிய கே.என்.நேரு சொத்து வரி உயர்வு குறித்து கூறும் பொழுது, 'மத்திய அரசு விதித்த நிர்பந்தம் காரணமாகவே சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், நிறைவேற்றாவிட்டால் உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி கிடைக்காது' என மத்திய அரசு கூறியதாகவும் கூறினார். அடுத்த அடுத்தபடியாக நேற்று பேசிய கே.என்.நேரு கூறியதாவது, "சொத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்ந்திருக்கிறது, நிலத்தின் மதிப்பை கணக்கிட்டு தான் சொத்துவரி உயர்த்தப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது" எனவும் தெரிவித்தார். இவ்வாறாக கடந்ழ நான்கு நாட்களாக சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசின் மீது காரணம் சுமத்த கே.என்.நேரு மிகவும் முயற்சித்தார்.
இப்படி தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு உயர்த்திய சொத்து வரி விவகாரத்தை மத்திய அரசு மேல் எவ்வாறு போடலாம் என தி.மு.க அரசின் அமைச்சர் கே.என்.நேரு யோசித்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது இன்று சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, "சொத்து வரி உயர்வை மனமுவந்து செய்யவில்லை. உள்ளாட்சி அமைப்புகள் வருவாய் பற்றாக்குறை இருக்கும் நிலையில் அதை சமாளிக்க வேண்டி சொத்து வரி உயர்வை தேவைப்படுகிறது. என்றால் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் எதிர்கட்சிகளும், தோழமை கட்சிகள் துணை நிற்க வேண்டும். மாநில வளர்ச்சியில் எந்தவித அரசியல் செய்ய வேண்டாம்" என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
இப்படி கடந்த 4 நாட்களாக சொத்து வரி உயர்வுக்கு மத்திய அரசின் மேல் பழிபோட்டு தப்ப முயன்ற தி.மு.க தற்போது தோல்வியைத் தழுவியுள்ளது. அதன் விளைவாகவே இன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் சொத்துவரி 'உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது' என மாநில அரசின் வரி உயர்வை ஒப்புக்கொண்டார்.
Template Source - Junior Vikatan / Puthiya Thalaimurai