கிருஷ்ணரிடமிருந்து கார்ப்பரேட் உலகம் கற்று கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?
By : Kanaga Thooriga
கிருஷ்ணரிடமிருந்து கார்ப்பரேட் உலகம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். – பகுதி 1
இந்திய புராணங்களில் பகவான் கிருஷ்ணர் அதிகமாக வழிபடக்கூடிய கடவளாக இருக்கிறார். கடவுளாக மட்டுமல்ல அவர் பெரும் தலைவராகவும் இருந்தார். சொல்வன்மை மிக்கவர், மக்களை தொடர்பு கொள்வதில் கைத்தேர்ந்தவர் என இன்றைய நவீன உலகில் தலைமைப்பண்பின் கீழ் வரிசைப்படுத்தப்படும் அனைத்து பண்புகளையும் தன்னகத்தே கொண்டவர்.
புராணங்கள் போற்றும் கிருஷ்ணரை பழமையான கடவுள் என்றெல்லாம் யாரும் கடந்தவிட முடியாது. இன்றைய காப்ரேட் உலக ஜாம்பவான்கள் அனைவரும் அவரிடம் பயில ஏராளமான பாடங்கள் உண்டு.. அவற்றில் சில
அழுத்தங்களை எதிர்கொள்ளுதல்
இன்று மிக பொதுவாக புழக்கத்திலிருக்கும் வார்த்தை "வர்க் ப்ரஷர் ". அன்று கிருஷ்ணருக்கு பாரதப்போரில் நூறுபேருக்கு எதிராக வெறும் ஐவரை மட்டுமே கொண்ட பாண்டவரணியை வெற்றி கொள்ளச்செய்ய வேண்டிய சூழல் இருந்தது. தன் வசம் பெரும் பொருப்பு ஒப்படைக்கப்பட்டிருந்த போதும், ஒரு நொடிக்கூட தன் பண்பையோ அல்லது பொறுமையையோ அவர் இழக்கவில்லை. மிகுந்த அழுத்தம் வாய்ந்த சூழலில் ஒரு தலைவர் இவ்வாறே நடந்து கொள்ள வேண்டும்
flexibility – இசைவுத்தன்மை
தன்னிடம் பேசிய அனைவருக்கும் தன் கவனத்தை முழுமையாக வழங்கினார் கிருஷ்ணர். போரே வேண்டாம் என்று சொன்ன பாண்டவர்களுக்கும் இசைவாய் இருந்தார், வெற்றி மட்டுமே பிரதானமாக கொண்டு கிருஷ்ணரை அணுகியவருக்கும் செவி மடுத்தார். இறுதியில் தன் மனம் எதை சொன்னதோ அதை மட்டுமே வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார். ஒரு தலைவராக நம் மனம் சொல்வதை பின்தொடரும் அதே வேளையில் நம்மை சுழ்ந்திருப்பவர்களின் விருப்பு வெறுப்புகளும் கவனத்தை வழங்குதல் முக்கியம் என்பதை உணர்த்தினார்.
பாராபட்சமின்றி இருத்தல்
ஒரு தலைவராக நீங்கள் ஜொலிப்பதற்கு மிக முக்கியமான தன்மை, பாரபட்சமின்றி செயல்படுதல். தன்னிடம் பணிபுரிபவர்கள், அல்லது நமக்கு கீழ் உள்ளவர்கள் நம்மை அணுக எந்த தயக்கமும் இல்லாதவாறு பார்த்து கொள்ளுதல் அவசியம். நம்மை அணுகுவது அவருக்கு எளிமையானதாக இருக்க வேண்டும். பகவான் கிருஷ்ணர் அவ்வாறே இருந்தார், எந்த பகுப்புகளையும் கொள்ளாமல் பாரபட்சமின்றி நடந்து கொண்டார்.
ரிஸ்க் மேனேஜ்மென்ட் – ஆபத்துகளை எதிர்கொள்ளுதல்
பாரத போரில் பங்குபெறும் முன்னதாகவே, போருக்கான ஆயத்த வேலைகள் அனைத்தையும் செய்தவர் கிருஷ்ணர். கெளரவர்கள் வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை அறிந்த கிருஷ்ணர், அனைத்து யுத்திகளுக்கும் தயாராகவே இருந்தார். இந்த முன்முனைப்பை தலைவராக விருப்பமுள்ள அனைவரும் பயிற்சி செய்ய வேண்டும்.
Professional – personal ( தொழில்முறை – தனிப்பட்ட முறை) இரண்டையும் பிரித்து பார்க்க தெரிய வேண்டும்
அர்ஜூனன் தன் சொந்த சகோதரர்களை எப்படி கொள்வது என்று தயங்கிய போது, யுத்த தர்மம் வேறு, சொந்தம் வேறு என்ற பெரும் தத்துவத்தை உலகிற்கு சொன்னவர் கிருஷ்ணர். இன்று பலரும் தடுமாறும் இடம் இது தான், பெரும்பாலனவர்கள், பணி இடத்தில் தொழில்முறையாக கையாள வேண்டியதை தனிப்பட்ட முறையில் எடுத்து கொண்டு துயரடைகிறார்கள். இதிலிருந்து மீள கிருஷ்ணர் காட்டும் பாதையே சிறந்தது.