ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தோற்கடிக்க காங்கிரஸ் செய்யும் உள்ளடி வேலைகள் - வெளிவரும் பகீர் தகவல்!
By : Mohan Raj
ஈரோட்டில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தோற்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியினரே உள்ளடி வேலை செய்து வருவதாக பரபர தகவல் கிடைத்துள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது, வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில் திமுக மற்றும் அதிமுக கூட்டணி ஈரோட்டில் செய்த பிரச்சாரங்கள், தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் விடுத்த அறிக்கைகள் என ஒவ்வொரு நாளும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இறுதிநாளில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார், அதுவரையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி ஜெயித்துவிடும் என்ற வெற்று நினைப்பில் இருந்த திமுகவினர் கடைசி நாளில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தால் மட்டுமே வேலை நடக்கும் என்ற நிலைக்கு திமுகவினர் தள்ளப்பட்டனர்.
மேலும் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இல்லாத காரணத்தினால் உங்கள் வாக்குறுதி நிறைவேற்றப்படும், தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள் என்ற விதமாக குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்தை விரைவில் அமல்படுத்துவோம் என முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இயந்திர நிலையில் திமுக கூட்டணியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இ.வி.கே.எஸ்.இளங்கோவன் சரிவர தொகுதிக்கு வர மாட்டார், வயது மூப்பின் காரணமாக அவர் ஜெயித்தாலும் அப்படியே இருந்து விடுவார் என்ற தகவல்கள் பரவி வந்த நிலையில் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஜெயிக்க கூடாது என காங்கிரஸ் கட்சி நிறைய திட்டமிட்டு வருவது அம்பலம் ஆகியுள்ளது.
சவுக்கு இணையதளத்தின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஜெயிப்பதை காங்கிரஸ் கட்சியினரை விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, 'காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற பேரவை தலைவராக இருப்பவர் செல்வப் பெருந்தகை இளங்கோவன் ஜெயித்தால் அந்த பதவியை அவர் விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும் அதனால் எம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தரப்பில் ஈவிகேஸ் இளங்கோவன் ஜெயிப்பதை யாரும் விரும்பவில்லை, மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் கே.எஸ்.அழகிரி இ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சை கேட்பதை கே.எஸ்.அழகிரி விரும்ப மாட்டார், எனவே கே.எஸ்.அழகிரி தரப்பும் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்எல்ஏ ஆவது விரும்பவில்லை!
இதெல்லாம் போதாது என சத்தியமூர்த்தி பவனில் இருக்கும் ஒரு சில நிர்வாகிகள் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் தங்களது பேச்சைக் கேட்க மாட்டார்கள் எனவே அவருக்கு நாம் எதுவும் செய்யக்கூடாது அவர் வந்தால் நமக்கு சரிப்பட்டு வராது என நினைக்கிறார்கள்' என்றும் கூறினார். மேலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் ஒரே ஒரு நாளில் அடையாளப் பிரச்சாரம் போல் செய்து விட்டு, புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துவிட்டு மீண்டும் திரும்பி விட்டனர். இவிகேஎஸ் இளங்கோவன் ஜெயிப்பதை காங்கிரஸ் கட்சியில் ஒருவரும் விரும்பவில்லை, அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் இ.வி.கே.எஸ்.இளங்கோவனை தோற்கடித்து அதிமுக கூட்டணியை வெற்றி பெற செய்ய கூட காங்கிரஸ் கட்சி தயங்காது என்ற அதிரடி தகவலையும் தெரிவித்துள்ளார்.
எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என ஆளும் திமுக தரப்பு 250 கோடி ரூபாயை களத்தில் இறக்கியுள்ள நிலையில் இ.வி.கே.எஸ்.இளங்கோவனை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சியே திட்டமிட்டு வருவதும், பிரச்சாரத்திற்கு சரியான முறையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஒத்துழைப்பு கொடுக்காததும் திமுக தரப்பிற்கு மிகுந்த கோபத்தை ஏற்படடுத்தியுள்ளது, இப்பொழுது தேர்தல் நேரம் என்பதால் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் எனவும் தேர்தல் முடிந்தால் இதனை பார்த்துக்கொள்ளலாம் எனவும் அறிவாலயம் முடிவில் இருப்பதாகவும் தெரிகிறது.
அப்படி ஒருவேளை இ.வி.கே.எஸ்.இளங்கோவன் தோற்றால் கண்டிப்பாக இதனை காரணமாக வைத்து காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட திமுக தரப்பு முடிவு செய்துள்ளது. ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகள் கூறும் திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என!
இ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஜெயிக்க கூடாது என காங்கிரஸ் தரப்பினரே திட்டமிட்டு வருவது ஈரோடு தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.