Kathir News
Begin typing your search above and press return to search.

'மாணவர்களே நீட் ரத்து ரகசியமெலாம் ஒரு பக்கம் இருக்கட்டும், முதல்ல நீட் பயிற்சி எடுத்து நல்லா படிங்க' - திமுகவின் அடுத்த அதிரி புதிரி!

மாணவர்களே நீட் ரத்து ரகசியமெலாம் ஒரு பக்கம் இருக்கட்டும், முதல்ல நீட் பயிற்சி எடுத்து நல்லா படிங்க - திமுகவின் அடுத்த அதிரி புதிரி!
X

Mohan RajBy : Mohan Raj

  |  2 March 2023 1:13 AM GMT

திமுக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் மீண்டும் ஒரு பல்டி அடித்தது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் திமுக அரசின் மீது மேலும் வெறுப்பை வரவழைத்துள்ளது.

கடந்த 2108ம் ஆண்டு முதல் தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை என்ற ஒன்றை திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் திட்டமிட்டு உருவாக்கினார்கள், அதன் பயனாக கடந்த 2019ம் ஆண்டு திமுக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் 38 தொகுதிகளை வென்றது, மத்தியில் பாஜக பெரும் வென்றாலும் தமிழகத்தில் மட்டும் பாஜக கூட்டணி ஒரே ஒரு இடத்தில மட்டும் வெற்றிபெற்றது. இதற்க்கு காரணம் திமுக கூட்டணி மக்கள் மத்தியில் ஏற்படுத்திய செயற்கை மோடி எதிர்ப்பு அலை எண்ணம். இதே எண்ணத்தை 2021 சட்டமன்ற தேர்தலிலும் சற்று மாற்றி மோடி - அதிமுக கூட்டணி எதிர்ப்பு அலை என ஒன்றை உருவாக்கியது. அதன் விளைவாக கூறப்பட்ட ஒன்றுதான் நங்கள் ஆட்சிக்கு வந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி கொண்டு வந்த நீட் தேர்வை ரத்துசெய்வோம் என்பது.

மோடி மீது வெறுப்பு ஏற்பட மாணவர்களின் மத்தியில் நீட் தேர்வு கடினம், நீட் தேர்வை வைத்து உங்களின் படிப்பிற்கு தடை ஏற்படுத்துகிறார்கள், மருத்துவ கனவை சிதைக்கிறார்கள் என பிரச்சாரம் செய்தது. மேலும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம். நீட் தேர்வை ரத்து செய்வது எப்படி? என்கிற ரகசியம் எங்களுக்கு மட்டும்தான் தெரியும் என்று கூறி உதயநிதி ஸ்டாலின் ஊர் முழுவதும் பிரச்சாரம் செய்தார்.

போதாக்குறைக்கு 'நீட் தேர்வை ரத்து செய்ய கொஞ்சமாவது வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்க வேண்டும்' என்று முந்தைய அ.தி.மு.க. அரசையும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தவர் உதயநிதி.

ஆனால், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதை நன்கு உணர்ந்துவிட்டனர். ஆகவே, மக்களின் கவனத்தை திசை திருப்பும் விதமாக ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைப்பது, தி.மு.க. எம்.பி.க்கள் மூலம் நாடாளுமன்றத்தில் கோஷம் எழுப்புவது, அனைத்துக் கட்சிக் கூட்டம் போடுவது, ஆளுநர் மசோதாவை கிடப்பில் போட்டுவிட்டார் என உருட்டுவது என தங்கள் தோல்வியை மறைக்க தொடர்ந்து ஏதேனும் ஒரு கபட நாடகத்தை மாதம் ஒருமுறை அரங்கேற்றி வருகிறார்கள்.

இந்த நிலையில் தற்பொழுது புதிய நாடகமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஊரில் இல்லாத நேரத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நீர் தேர்வு பயிற்சி தொடர்பாக ஹைடெக் ஆப் கொண்டுவரப்படும் அதில் மாணவர்கள் பயனடையலாம். எனவே நீட் தேர்வு பயிற்சியை நாங்கள் தொடங்கவிருக்கிறோம் இதனால் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என கூறியுள்ளார்.

இப்படி ஓட்டு வாங்கும் வரைக்கும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்து விடுவோம் என நீட் பற்றிய பயத்தை மாணவர்கள் மத்தியில் விதைத்து நீட் தேர்வு பற்றிய தேர்வு பயத்தை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்தி அதன் மூலம் மத்திய அரசின் மீது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வெறுப்பை வர வைத்து அந்த வெறுப்பை ஓட்டுக்களாக வாங்கி சம்பாதித்த திமுக அரசு தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாத என தெரிந்தவுடன் நாங்கள் உங்களுக்கு நீட்டை கற்றுத் தருகிறோம் என பல்டி அடிக்கும் விதமாக கூறியது மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் திமுகவினரின் போலி நாடகத்தை உணர்ந்துவிட்டனர் மாணவர்கள் குறிப்பாக பெற்றோர்கள்.

இதையே தான் முன்னாடி நீட் தேர்வு பயிற்சி தருகிறோம் நீட் தேர்வு நல்லது என மத்திய அரசும் சொன்னார்கள் அப்பொழுதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி யூ டர்ன் போட்டு பர்னிச்சர் எல்லாம் உடைத்துவிட்டு இப்பொழுது நீங்களும் நீட் பயிற்சி என்றால் என்ன அர்த்தம் என கேள்வியை திமுக அரசை பார்த்து கேட்கிறார்கள், பதில் சொல்லவேண்டிய முதல்வரோ யூ ட்யூப் சானலில் மும்முரமாக பேட்டி கொடுக்கிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News